உக்கடம் - சுங்கம் பைபாஸ் சாலையோர இரும்பு தடுப்புகள் திருட்டு : மாநகராட்சி அதிகாரிகள் அதிர்ச்சி

கோவை: கோவை வாளாங்குளக் கரையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பை சேதப்படுத்தி, 200 அடி நீளமுள்ள இரும்பு தடுப்புகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மாநகராட்சி அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கோவை: கோவை வாளாங்குளக் கரையில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்பை சேதப்படுத்தி, 200 அடி நீளமுள்ள இரும்பு தடுப்புகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் மாநகராட்சி அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 



கோவையில் அமைந்துள்ள எட்டு குளங்களில் ஒன்றான வாளாங்குளத்தை ஒட்டி சுங்கம் - உக்கடம் பைபாஸ் சாலை உள்ளது. உக்கடம் பகுதியிலிருந்து சுங்கம் சந்திப்பை நோக்கி வரும் வாகனங்கள் சாலையை ஒட்டியுள்ள வாளாங்குளத்தில் விழுந்து விபத்துகள் ஏற்படாமல் இருக்கவும், குளக்கரையில் குப்பைகளையும், கட்டிடக் கழிவுகளையும் கொட்டுவதை தடுப்பதற்காகவும் பல லட்சம் ரூபாய் செலவில் சாலையின் ஓரத்தில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டன.



சுமார் 3 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு தடுப்புகளின் சில பகுதிகள் தற்போது சேதமடைந்துள்ளன. குறிப்பாக, இந்திரா நகர் எதிரே அமைக்கப்பட்டிருந்த 200 அடி நீளமுள்ள இரும்பு தடுப்புகள் சமூக விரோதிகளால் திருடப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது, அங்கு வெறும் இரும்பு கம்பிகள் மட்டுமே உள்ளன. அப்பகுதியில் வசிப்போர், இவற்றில் கால்நடைகளை கட்டி வைத்துள்ளனர். 



"உக்கடத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கி செல்லும் ஏராளமானோர் இச்சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். விபத்துகளை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்ட தடுப்புகள் சேதமடைந்துள்ளதால், அவையே தற்போது ஆபத்தாக மாறியுள்ளன. சாலையோரங்களில் நிற்கும் சிறிய இரும்பு கம்பிகள் இரவு நேரங்களில் பயணிப்பவர்களுக்கு பெரும் விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது' என்கிறார் இப்பகுதியில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் ரவி.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, "சமூக விரோதிகள் சிலர் சாலையோர இரும்பு தடுப்புகளின் சில பாகத்தை திருடியுள்ளனர். இதுபற்றி போலீசாரிடம் புகாரளிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர். இதுபோன்ற செயல்கள் அரங்கேறிய நிலையில், தடுப்பு அமைத்ததோடு தங்களின் பணி முடிந்துவிட்டது என்று எண்ணாமல், மக்களின் வரிப்பணத்தில் உருவான அவற்றைப் பாதுகாப்பதும் தங்களின் கடமை என்று மாநகராட்சி நிர்வாகம் உணர்வது எப்போது...?

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...