தடையை மீறி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு செல்லும் மக்கள் : கண்டுகொள்ளாத பொதுப்பணித்துறை

ஈரோடு : அனுமதியின்றி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு செல்பவர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ஈரோடு : அனுமதியின்றி பவானிசாகர் அணையின் மேற்பகுதிக்கு செல்பவர்களை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பவானிசாகர் அணை, தமிழகத்திலேயே மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாகும். இந்த அணை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அணையின் மேற்பகுதி செல்ல யாருக்கும் அனுமதியில்லை. மேலும், பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அணையின் மேற்பகுதியை வருடத்தில் ஒருநாளான ஆடிமாதம் பதினெட்டாம் தேதிக்கு மட்டுமே பொதுமக்களுக்கு பார்வையிட அனுமதி வழங்கப்படுகிறது. 

ஆனால், கடந்த சில நாட்களாக அணையின் மேற்பகுதிக்கு செல்லும் பழத்தோட்டம் நுழைவாயில் வழியாக பொதுப்பணித்துறையில் பணியாற்றும் உயரதிகாரிகள் மற்றும் உழியர்கள் விடுமுறை நாட்களில் வேன் மற்றும் சுற்றுலா வாகனங்களில் வருபவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு அனுமதி அளிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. மேலும், பழத்தோட்டம் நுழைவு வாயிலில் உள்ள ஊழியர்கள் அணையின் மேற்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள மரங்களில் இருந்து காய்ந்து விழும் விறகுகளை உணவகங்களுக்கு விற்பனை செய்வதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 

"பொதுப்பணித்துறையில் பணியாற்றும் சில அதிகாரிகள் தங்களது உறவினர்களை மட்டுமே அணையில் மேற்பகுதிக்கு செல்ல அனுமதிக்கின்றனர். அவர்கள் இரவு நேரம் வரை அணையின் மேற்பகுதியில் அமர்ந்து கொண்டு மது அருந்துவதும், சில தீய செயல்களில் ஈடுபடுவதும் வாடிக்கையாகி விட்டது. இதைப்பற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்வதில்லை",  என சமூக ஆர்வலர்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர்.

ஆசியாவிலேயே பெரிய மண் அணை என்ற பெருமையைக் கொண்ட பவானிசாகர் அணையின் பாதுகாப்பு கருதி இதுபோன்ற குற்றங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...