மலைப்பகுதியை சுரண்டி மணல் கடத்தும் கும்பல்: கண்டுகொள்ளாத வருவாய்த்துறை

ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள தடுப்பணைகளில் பட்டப்பகலில் நடைபெறும் மண்ல் கடத்தலை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஈரோடு: சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள தடுப்பணைகளில் பட்டப்பகலில் நடைபெறும் மண்ல் கடத்தலை வருவாய்த்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள கிராமங்களில் மழை நீரை சேகரிக்க பல்வேறு பகுதிகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக தடுப்பணைகளில் தண்ணீர் நிரம்பியிருந்ததால் சுற்றுவட்£ர பகுதிகளில் உள்ள விவசாய கிணறுகள் மற்றும் ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.

இந்நிலையில், தற்போது கடுமையான வெயில் காரணமாக பெரும்பாலான தடுப்பணைகளில் தண்ணீர் வற்றியதால் அதிக அளவில் மணல் படிந்துள்ளது. தடுப்பணைகளில் படிந்துள்ள மணலை மர்ம நபர்கள் பட்டப்பகலில் அள்ளி டிராக்டரில் லோடு ஏற்றி விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். 



இதுகுறித்து சமுக ஆர்வலர்கள் கூறுகையில், "இரவு பகல் பாராமல் மணலை திருடி டிராக்டரில் ஏற்றி ரு.4 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை விற்பனை செய்கின்றனர். வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் மணல் திருட்டை கண்டுகொள்ளாமல் உள்ளனர். மணல் திருட்டில் ஈடுபடுவோரிடம் கிராம மக்கள் கேட்டால் பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ-விடம் அனுமதி கேட்டு மணல் அள்ளுவதாகவும், நீங்கள் எந்த அதிகாரிகளிடம் மணல் திருட்டு குறித்து தகவல் தெரிவித்தாலும் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என சவால் விடுகின்றனர். திருடப்படும் மணல் பெரும்பாலும் மலைப்பகுதிகளில் அரசுத் துறைக்கு சொந்தமாக கட்டிடம் கட்டுதல் மற்றும் பாலம் கட்டுதல் பணிக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வின் ஆதரவோடு மணல் கடத்தப்படுவதால் பல தடுப்பணைகள் இருக்கும் சுவடு தெரியாமல் காணாமல் போய்விடும். எனவே, உடனடியாக மாவட்ட நிர்வாகம் மணல் கடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்றனர்.



Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...