தமிழகத்தில் அடுத்த மாதம் பா.ஜ.க., ஆட்சி அமையும்: எச். ராஜா

நீலகிரி: தமிழகத்தில் அடுத்த மாதம் பா.ஜ.க., ஆட்சியமையும் என பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார்.

நீலகிரி: தமிழகத்தில் அடுத்த மாதம் பா.ஜ.க., ஆட்சியமையும் என பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடியின் பட்ஜெட் விளக்கக் கூட்டம் குன்னூர் வி.பி. தெருவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த பா.ஜ.க., தேசிய செயலாளர் எச். ராஜா குன்னூர் வந்தார். அப்போது, அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 



அவர் கூறியதாவது:- நேற்று முன்தினம் காவிரியை முன்வைத்து திமுக நடத்திய போராட்டத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. காவிரி டெல்டா பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். திமுகவின் போராட்டம் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. காவிரி பிரச்சனையில் தி.மு.க., தான் துரோகம் செய்து உள்ளது. பா.ஜ.க., ஆட்சிக்கு வந்த 6 வார காலத்தில் காவிரி பிரச்சனைக்கு தீர்வு காண திட்டமிட்டு செயல்பட்டு வந்தது. காவிரி பிரச்சனை 4 மாநில சம்பந்தப்பட்ட விவகாரம் ஆகும். தமிழகம் மட்டுமே காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று கோருகிறது. காங்கிரஸ் ஆளும் கர்நாடகா, கம்யூனிஸ்ட் ஆளும் கேரளா ஆகியவை எழுத்துப்பூர்வமாகக் கொடுத்து உள்ளன. இதில், தி.மு.க., விவசாயிகளையும், மக்களையும் ஏமாற்றுகிறது. 

நதிகள் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. மத்திய அரசின் பட்டியலில் இருந்தால் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து விடும். வாரியம் என்பது பிரதிநிதிகள் கொண்ட குழு ஆகும். இதற்கு மாநில அரசுகள் பிரதிநிதிகளை அனுப்பவில்லை. உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சனையில் நல்ல முடிவு கொடுக்க உள்ளது. மக்களை திசைதிருப்ப தி.மு.க., காங்கிரஸ் போன்ற கட்சிகள் முயற்சி செய்கின்றன. 1970-ம் ஆண்டில் ஹேமாவதி போன்ற அணைகளை கர்நாடகா கட்டியது. அப்போது, தமிழக முதலமைச்சராக இருந்த கருணாநிதி அணைக் கட்டினால் கட்டி விட்டு போகட்டும் என்று சட்டமன்றத்தில் கூறினார். நீதிமன்றத்திலிருந்தும் வழக்கை வாபஸ் பெற்றார். காவிரி பிரச்சனையில் மத்திய அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்வது போன்ற மாயத் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட சிறார்கள் போராட்டம் நடத்துகின்றனர். அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் தான் இந்த ஆலை கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டது. 1992- மற்றும் 93-ம் ஆண்டு மகாராஷ்ட்ராவில் உள்ள ரத்தனகிரியில் அமைக்க இருந்த இந்த ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பியது. 1991 முதல் 1995-ம் ஆண்டு காலகட்டத்தில் ப. சிதம்பரம் தான் அ.தி.மு.க., ஆட்சியில் 1994-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை அமைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. யாரை ஏமாற்ற இவர்கள் நாடகமாடுகிறார்கள். இவர்கள் செய்த தவற்றை மறைக்கிறார்கள். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு 2006ம் ஆண்டு திமுக ஆட்சியில் அனுமதி கொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் மோசமான கட்சிகள் திராவிட கட்சிகள் ஆகும். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக அணைகளையோ, தடுப்பணைகளையோ கட்டவில்லை. இவர்கள் ஆட்சியில் தமிழகம் பாலைவனம் ஆகிவிட்டது. விவசாயிகளை ஏமாற்ற நாடகம் போடுகிறார்கள். கர்நாடகாவில் ராகுல் காந்தி காவிரியில் தண்ணீர் தராதே என்று பிரச்சாரம் செய்து வருகிறார். தி.மு.க.,வின் அத்தியாயம் முடிந்து விட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி தமிழகம் முழுவதும் எதிரொலிக்கும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சூரப்பாவை துணைவேந்தராக நியமித்ததைக் குறை கூறினார்கள். இந்த நியமனம் தவறு இல்லை. இதற்கு முன்பு, அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் இருந்தார். 

இந்தப் பிரச்சனைகள் எல்லாம் மக்களிடம் எடுபடாது. கமல்ஹாசனின் பேச்சை மக்கள் கேட்க மாட்டார்கள். அவரை பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்க முடியுமா..? ஆரம்பப் பள்ளி ஆசிரியராகக் கூட நியமிக்க முடியாது. அவர் அநாவசியமாகப் பேசி வருகிறார்.

காவிரி பிரச்சனையில் மோடி அரசுதான் தீர்வு கொடுக்க முடியும். 9-ம் தேதி உச்சநீதிமன்றம் அறிவுரைப்படி நல்ல முடிவு ஏற்படும். சுதந்திரத்திற்குப் பின்பு நேர்மையான பிரதமராக மோடி உள்ளார். நான் ஒரு விவசாயி ஆவேன். ஆனால், ஸ்டாலின் விவசாயி அல்ல. வேல்முருகன், திருமாவளவன் போன்றோர் தமிழக மக்களை திசைதிருப்புகிறார்கள். பொதுச் சொத்தை சேதப்படுத்தும் வேல்முருகன் போன்றோர் மீது நடவடிக்கை பாயும். எதிர்வரும் மே மாதத்தில் தமிழகத்தில் பா.ஜ.க., ஆட்சி தமிழகத்தில் அமையும். நீட் தேர்வு பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே கொண்டு வரப்பட்டது. மாநில அரசு ஒரு ஆண்டு இதில் விலக்கு கேட்டது. கடந்த ஆண்டு முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 2018 - 19 கல்வியாண்டிலும் நீட் தேர்வு அடிப்படையில் நடக்கும். இவ்வாறு கூறினார். 

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...