சிங்காநல்லூரில் உடன் பிறந்த சகோதரியை வெட்டிக் கொன்ற சகோதரர்

கோவை : கோவையில் குடும்ப பிரச்சினை காரணமாக உடன் பிறந்த சகோதரியை அவரது தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை : கோவையில் குடும்ப பிரச்சினை காரணமாக உடன் பிறந்த சகோதரியை அவரது தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிங்காநல்லூரை அடுத்த உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. கணவர் சுரேஷூடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். தற்போது இராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணிபுரிந்து வந்தார். இவரது சகோதரர் சரவணக்குமார். நேற்று வீட்டில் இருந்த சரவணக்குமாருக்கும், சங்கீதாவுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இதில் ஆத்திரமடைந்த சரவணகுமார் சங்கீதாவை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து சங்கீதாவின் உடலை இரண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து இரு சக்கர வாகனம் மூலம் எஸ்.ஐ.எச்.எஸ் காலனில் உள்ள மைதானத்திற்குக் கொண்டு சென்று எரித்துள்ளார். இந்த சம்பவங்கள் நடக்கும் போது சங்கீதாவின் 8 வயது மகள் வீட்டில் இருந்துள்ளார்.



இந்தநிலையில், சங்கீதா இன்று பணிக்கு வராததால் அவருடன் பணிபுரியும் சக தோழிகள் அவரது வீட்டிற்குச் சென்று விசாரித்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த குழந்தை நடந்த சம்பவங்கள் குறித்து அவர்களிடம் தெரிவித்துள்ளார். 

இதனையடுத்து, காவல் துறைக்கு தகவல் தெரிக்கப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, பாதி எரிந்த நிலையில் இருந்த பெண்ணின் உடலை போலீசார் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த சிங்காநல்லூர் போலீசார் சரவணக்குமாரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் கடந்த சில மாதங்களாகவே மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...