காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஈரோட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோடு : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஈரோட்டில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், மத்தியஅரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி புஞ்சை புளியம்பட்டியில் உள்ள உதவித் தொடக்கக்கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச்செயலாளர் விஜயகுமார், கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர் சுரேஷ், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆனந்த ஜோதி, ஜெயச்சந்திரன், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தைச்சேர்ந்த தினேஷ்குமார், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். 

இதே போல், திருப்பூரில் கொங்கு இளைஞர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், தமிழகத்தைத் தொடர்ந்து வஞ்சிக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், அதற்கு உறுதுணையாக செயல்படும் மோடியை கண்டிக்கும் விதமாக கொங்கு இளைஞர் பேரவையினர் சார்பில் திருப்பூர் மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...