தமிழர்களின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும் : ரஜினிகாந்த் காட்டம்

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழர்களின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும் என்று நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார்.

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழர்களின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும் என்று நடிகர் ரஜினிகாந்த் காட்டமாக தெரிவித்துள்ளார். 

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் காலம் தாழ்த்தி வருவதைக் கண்டித்து பல்வேறு அமைப்பினரும் தமிழகத்தில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திரையுலகினர் போராட்டத்தில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மவுன அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நடிகர் சங்க தலைவர் நாசர் இந்த போராட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த போராட்டத்தில், நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், சிவகுமார், சிவகார்த்திகேயன், ராஜேஷ், சந்திரசேகர், விஷால், நடிகை ஸ்ரீப்ரியா மற்றும் நடிகர் கார்த்தி உள்ளிட்டோரும் போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.

இந்த போராட்ட களத்துக்கு ரஜினி கலந்து கொள்வதற்கு முன்னர் சென்னையில் போயஸ் தோட்டத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது பிரதமருக்கு நான் வைக்கும் கோரிக்கையாகும். ஆனால், மேலாண்மை வாரியத்தை அமைக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்துகிறது. மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் தமிழர்களின் கோபத்துக்கும், அதிருப்திக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும். 

இயற்கையான மண், காற்று, நீரை மாசுபடுத்த விடக் கூடாது. பஞ்சபூதங்களை மாசுபடுத்தினால் அது உலகத்தையே அழித்துவிடும். என்ன தான் ஸ்டெர்லைட் நிர்வாகம் விளக்கம் கொடுத்தாலும் அதை ஏற்க முடியாது. மக்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்த சென்னை வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணியலாம். கர்நாடகத்தில் எனது படத்தை வெளியிடாமல் தடுத்தால் தயாரிப்பாளர்களும் மாநில அரசும் பார்த்து கொள்ளும். நியாயமான கோரிக்கைக்காக நாம் போராடுகிறோம். யாரும் எந்த மாநிலத்திலும் பணி செய்யலாம். அதுதான் இந்தியாவின் சிறப்பு. எனினும் காவிரிக்காக போராடி வரும் சூழலில் கர்நாடகத்தைச் சேர்ந்தவரை அண்ணா பல்கலை துணைவேந்தராக நியமித்திருக்க வேண்டாம். " என்றார்.

Newsletter

சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA நியமனம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சட்ட விதிகள் ஆய்வுக்குழு உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் MLA தேர்வு செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர...

கோவை மாநகர BDDS குழுவினர் மாநில அளவிலான Anti-Sabotage Check போட்டியில் மீண்டும் தங்கப் பதக்கம்

சென்னை ஆவடி R.C.-யில் நடைபெறும் தமிழ்நாடு காவல்துறையின் Anti-Sabotage Check Competition 2026-ல் கோவை மாநகர BDDS குழுவைச்...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...