தூங்கவிடாத துர்நாற்றம்: நள்ளிரவில் சாலை மறியலில் இறங்கிய வெள்ளலூர் மக்கள்

கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் துர்நாற்றம் அதிகமானதால், முறையாக பராமரிப்பு செய்யாத மாநகராட்சியைக் கண்டித்து நேற்று இரவு கோணவாய்க்கால் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை: வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் துர்நாற்றம் அதிகமானதால், முறையாக பராமரிப்பு செய்யாத மாநகராட்சியைக் கண்டித்து நேற்று இரவு கோணவாய்க்கால் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவையில் நாள்தோறும் சேகரிக்கப்படும் 650 டன் அளவிலான குப்பை மற்றும் கழிவு பொருட்கள் வெள்ளலூரில் அமைந்துள்ள குப்பை கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. அங்கு அவை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்காக அனுப்பப்படுகிறது.

அதிகப்படியான குப்பைகள் மலைபோல் தேங்குவதால், குப்பை கிடங்கை ஒட்டியுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது குப்பைகளில் தீ வைக்கப்படுவதால் புகையும், துர்நாற்றமும் பொதுமக்களை நாள்தோறும் வாட்டிவதைக்கிறது.

இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக குப்பை கிடங்கிலிருந்து மிக மோசமான துர்நாற்றம் வீசிவருவதால், அப்பகுதியில் மக்கள் வசிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. சொந்த வீடு இருந்தும் பக்கத்து தெருக்களில் உள்ள வீடுகளில் குழந்தைகளும் முதியோர்களும் தஞ்சமடைந்து வருகின்றனர்.



பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொண்டு துர்நாற்றத்தை கட்டுப்படுத்த வேண்டி பலமுறை புகாரளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று இரவு 10 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



தொடர்ந்து, காவல்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நேரில் வந்து விரைவில் தீர்வு காணப்படும் என்று உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...