சென்னையில் ஐ.பி.எல்., போட்டிகள் தேவையா..? என வாரியம்தான் முடிவு செய்ய வேண்டும்: திருநாவுக்கரசர்

நீலகிரி: சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தேவையா என்பது குறித்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி: சென்னையில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தேவையா என்பது குறித்து கிரிக்கெட் வாரியம் தான் முடிவு செய்ய வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறும்போது, "தலித் மக்கள் மீதான சரத்துக்களை நீர்த்து போகும் விதமாக நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. பா.ஜ.க., ஆட்சிக்கு வந்த பிறகு இந்துத்துவா அமைப்புகள் மூலம் சிறுபான்மையினர் தலித் மக்கள் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த சட்டத்தை நீர்த்து போக செய்ததால், இவர்களின் தாக்குதல் அதிகரித்துக் காணப்படும் கூடலூரில் அனைத்து மக்களையும் இணைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. தேயிலை விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ. 30 கிடைக்க நடவடிக்கையை எடுக்க வேண்டும். ஜென்ம நிலங்கள் பட்டா வழங்காமல் உள்ளதைக் கண்டிக்கிறேன்.

காவிரி நீர் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்ட நிலையில், தீர்ப்புகளை மத்திய அரசு மதிக்காமல் இருந்தால் மாநில அரசோ, மாவட்ட நிர்வாகமோ எதிர்காலத்தில் நீதிமன்ற தீர்ப்பை மதிக்கக்கூற முடியாத நிலை ஏற்படும். ஒரு வாரகால கண்டன போராட்டத்திற்குப்பின் ஆளுநரை சந்தித்து மனு கொடுக்கவுள்ளோம். உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றாமல் கர்நாடக அரசை விமர்சிக்கக் கூடாது. ஐ.பி.எல்., போட்டிகள் தேவையா என்பது குறித்து அந்த அமைப்புதான் முடிவு செய்ய வேண்டும்.

தி.மு.க. காங்கிரஸ் உறவு சுமூகமாக உள்ளது. தி.மு.க., கூட்டணியில் பலரும் இணைவார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் பதவி நீக்கத்தை சபாநாயகர் நீக்கி இருக்கக்கூடாது. நீதிமன்ற உத்தரவு வந்ததும் இந்த ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளது. கூட்டுறவு தேர்தலை ரத்து செய்ய வேண்டும். சூரப்பா, வீரப்பா, கட்டப்பாக்களைப் போடுவதைவிட முறைப்படி தேர்ந்தெடுப்பதில் வேறுமாநிலத்தைசேர்நத்வரைநியமித்திருக்க வேண்டாம். இதனை காங்கிரஸ் கண்டிக்கிறது. பலவீனத்தை மறைப்பதற்கு மத்திய அரசு மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது," என்றார்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...