வண்டலூரில் இருந்த ‘கிரி’ ஆண் யானை முதுமலைக்கு ‘டிரான்ஸ்பர்’

நீலகிரி: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ‘கிரி’ என்ற ஆண் யானை முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

நீலகிரி: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து ‘கிரி’ என்ற ஆண் யானை முதுமலையில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. 



நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாம் அமைந்துள்ளது. இம்முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவை வனத்துறை ரோந்து பணிகளுக்காகவும், வனங்களை வீட்டு வெளியேறும் காட்டு யானைகளை விரட்டுதல் மற்றும் பிடித்தல் போன்ற கும்கி பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

மேலும், தெப்பக்காடு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு யானை சவாரிக்கு பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கோவை மாவட்டம் சாடிவயல் முகாமில் இருந்த பாரி மற்றும் விஜய் ஆகிய கும்கி யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதில் பாரி டாப்சிலிப்பில் உள்ள யானைகள் முகாமிற்கும், விஜய் தெப்பக்காடு முகாமிற்கும் இடமாற்றம் செய்யப்பட்டன. இதற்கு பதிலாக காட்டு யானை விரட்டும் பணிகளுக்காக தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் பராமரிக்கப்பட்டு வந்த ஜான், சேரன் ஆகிய இரண்டு யானைகள் கடந்த 3-ம் தேதியன்று சாடிவயல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

தற்போது தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் ஒரு குட்டி யானை உட்பட 22 யானைகள் உள்ளன. இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம், ஜவல்கிரி வனத்தில் தாயை பிரிந்த நிலையில் சுற்றி திரிந்த ஆண் யானை குட்டி கடந்த 2010-ம் ஆண்டு வனத்துறையினரால் மீட்கப்பட்டது. இந்த யானை சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு கிரி என பெயரிடப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. 

தற்போது இதற்கு 9 வயதாகிறது. கும்கியாக மாற்ற பயிற்சி அளிப்பதற்கான வசதிகள் வண்டலூரில் இல்லாததால், இந்த யானையை முதுமலைக்கு இட மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை வண்டலூர் பூங்காவில் இருந்து லாரி மூலம் முதுமலைக்கு அழைத்து வரப்பட்டது. அதன் உடல் எடை சரிபார்க்கப்பட்டு, பின்னர் மாயாற்றில் குளிப்பாட்டப்பட்டது. பின்னர், தெப்பகாட்டில் உள்ள பாம்பேக்ஸ் முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டது. கிரியின் வருகையைத் தொடர்ந்து தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகளின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...