ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் கைது

கோவை : ஊதிய உயர்வு தொடர்பான அரசாணையை உடனடியாக அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.


கோவை : ஊதிய உயர்வு தொடர்பான அரசாணையை உடனடியாக அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.



உள்ளாட்சி துறையில் பணியாற்றும் துப்பரவு பணியாளர்கள், குடிநீர் வினியோகிப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு ஊதிய உயர்வு வழங்க வகை செய்யும் 2டி (62) அரசாணை கடந்த 2017-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன்படி, மாநகராட்சிகளில் பணியாற்றுபவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 625-ம், நகராட்சிகளில் பணியாற்றுபவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ. 525-ம் வழங்கப்பட வேண்டும். ஆனால், பல இடங்களில் அரசாணைக்கு எதிராக மாத ஊதியமாக ரூ. 3,000 முதல் ரூ. 4,500 வரை மட்டுமே பணியாளர்களுக்கு வழங்கப்படுவதாக உள்ளாட்சி துறையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். 



இந்நிலையில், உள்ளாட்சி துறையில் வெளியிடப்பட்ட அரசாணையை உடனடியாக அமல்படுத்தக் கோரி கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித்துறை ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஊதியம் தொடர்பாக அரசாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாதைத் தொடந்து, போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...