கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது - நகராட்சி ஆணையர்

நீலகிரி: உள்ளூர் நீர்த்தேக்கங்களில் இருப்பு உள்ளதால் கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி ஆணையர் சி.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி: உள்ளூர் நீர்த்தேக்கங்களில் இருப்பு உள்ளதால் கோடையில் உதகை நகருக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று நகராட்சி ஆணையர் சி.ரவி தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் உதகை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரம் புனல் மின் உற்பத்திக்கு பயன்படும் பார்சன்ஸ் வேலி அணை. மேலும், மார்லிமந்து, டைகர் ஹில், கோரிசோலை, தொட்டபெட்டா மேல்/கீழ், கோடப்பமந்து மேல்/கீழ், ஓல்டு ஊட்டி மற்றும் கிளன் ராக் ஆகிய நீர்த்தேக்கங்கள் உதகையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கின்றன.

நகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்கத்தின் மொத்தம் 56 அடி கொள்ளளவில் தற்போது இருப்பு 32.50 அடியாகக் குறைந்து விட்டது. இந்த நீர்த்தேக்கத்திலிருந்து வெலிங்டன் ராணுவ மையத்துக்கும் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்தாண்டை விட இந்தாண்டு உதகை நகருக்கு தண்ணீர் விநியோகிக்கும் உள்ளூர் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு உள்ளதால், கோடைக் காலத்தை சமாளித்து விடலாம் என நகராட்சி நிர்வாகம் நம்புகிறது.

ஆனால், தற்போதுள்ள இருப்பு கோடை சீசனின் போது உதகைக்கு வரும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யுமா? என்ற கேள்வியும் மேலோங்கி உள்ளது. 

தாராளம்:

உதகை நகராட்சி ஆணையர்(பொ) சி.ரவி கூறுகையில், "உதகை நகராட்சிக்கு தண்ணீர் விநியோகிக்கும் நீர்த்தேக்கங்களில் பார்சன்ஸ் வேலி நீர்த்தேக்கத்தை தவிர்த்து மற்ற நீர்த்தேக்கங்களில் கடந்தாண்டை விட தண்ணீர் இருப்பு அதிகமாக உள்ளது. மார்லிமந்தில் 10 அடி, டைகர் ஹிலில் 37 அடி, கோரி சோலையில் 9 அடி , மேல் தொட்டபெட்டாவில் 19.50 அடி, மேல் கோடப்பந்தில் 6 அடி, கீழ் தொட்டபெட்டாவில் 14 அடி, கீழ் கோடப்பமந்தில் 5 அடி, ஓல்டு ஊட்டியில் 5 அடி மற்றும் கிளன்ராக் நீர்த்தேக்கத்தில் 2 அடி தண்ணீர் இருப்பு உள்ளது.



பார்சன்ஸ் வேலியில் மின் உற்பத்தி நடப்பதால் நீர்மட்டம் குறைந்துள்ளது. குடிநீர் தேவைக்கான தண்ணீர் இருப்பை மின் உற்பத்திக்குப் பயன்படுத்த வேண்டாம் என மின் வாரியத்துக்கு கடிதம் கொடுக்கப்படும். இந்த இருப்பைக் கொண்டு ஏப்ரல் மாதம் வரை சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படும். முறையாகக் கையாண்டால் பருவ மழைக் காலம் வரை தண்ணீர் தேவையை சமாளிக்க முடியும். மேலும், கோடை மழை பெய்தால், நீர்த்தேக்கங்கள் நிரம்பி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது." என்றார்.



Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...