காவலர்களைத் தாக்கியவர்களை கிள்ளி ஏறிய வேண்டும்: ரஜினிகாந்த் டுவீட்

சென்னை: சென்னையில் நேற்று காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவீட்டியுள்ளார்.


சென்னை: சென்னையில் நேற்று காவலர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கடுமையான சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவீட்டியுள்ளார். 

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை-கொல்கத்தா அணிகள் மோதிக்கொண்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. காவிரி,ஸ்டெர்லைட் ஆலை என்று பல பிரச்சினைகள் தமிழகத்தில் தலைதூக்கியுள்ள நிலையில் ஐ.பி.எல் போட்டி நடைபெறக் கூடாது என்று பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று மாலை சேப்பாக்கம் மைதானம் முன்பு கூடிய நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது அவர்களை கைது செய்ய வந்த காவலர்களை அக்கட்சியினர் தாக்கினர். தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனங்களை தெரிவித்துள்ளார். 

அந்த பதிவில் ரஜினி கூறியிருப்பதாவது:-



வன்முறையின் உச்சகட்டமே சீருடையில் பணிபுரியும் காவலர்கள் தாக்கப்படுவது தான். இத்தகைய வன்முறை கலாச்சாரத்தை உடனே கிள்ளி எறியவில்லை என்றால் நாட்டுக்கே பேராபத்து. சீருடையில் இருக்கும் காவலர்கள் மீது கை வைப்பவர்களை தண்டிக்க இன்னும் கடுமையான சட்டங்களை நாம் இயற்றவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

நாம் தமிழர் கட்சியினர் ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டவர்கள் போலீசார் தாக்கப்படும் போது உடனிருந்த நிலையில், அக்கட்சி தொண்டர்களை நேரடியாக சாடி பேசிய ரஜினிகாந்த்-க்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Newsletter

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

Ganga Hospital Receives Lifetime Achievement Award at CII Hospital Tech 2026

Dr. S. Rajasekaran, Chairman of the Dept of Orthopaedics and Spine Surgery at Ganga Hospital, Coimbatore, received the a...

சிறுவாணி அணை நீர்மட்டம் சரிவு: கோவையில் குடிநீர் விநியோக இடைவெளி 5 நாட்களாக அதிகரிக்க திட்டம்

மழையின்மை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 29 அடியாக குறைந்துள்ளது. வடகிழக்கு பருவமழை வரை சமாளிக்க குடிநீர் விநியோக இ...

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் பாதாள சாக்கடை குழியில் சிக்கிய தொழிலாளர்கள் பேருந்து; JCB மூலம் மீட்பு

கோவை வெள்ளக்கிணறு பகுதியில் தனியார் தொழிற்சாலை பணியாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து, சரியாக மூடப்படாத பாதாள சாக்கடை குழியி...

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...