கோவையில் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் கொண்டாட்டம்

கோவை : அண்ணல் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் விழா கோவையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது.


கோவை : அண்ணல் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் விழா கோவையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சியினர் சார்பில் கொண்டாடப்பட்டது. 

கோவை பவர் ஹவுஸ் பகுதியில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், திராவிடர் கழகத்தினர், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த அமைப்புகளை சேர்ந்தவர்கள் என நூற்றுக்கணக்கானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சிறுபான்மையினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும், இந்திய இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட உறுதிமொழிகளை அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்த பின் எடுத்துக் கொண்டனர். 

சி.பி.ஐ.எம்.எல் அமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாக வந்தும், அம்பேத்கரின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி மாலை அணிவித்தனர். 



இதேபோல, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அம்பேத்கரின் பிறந்த நாள் மற்றும் சமூக நீதி நாளான இன்று மாவட்ட ஆட்சியர் த.நா. ஹரிஹிரன், அம்பேத்கரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்ச்சியின் போது, அரசு ஆதிதிராவிடர் மாணவ, மாணவியர்கள் விடுதிகளுக்குப் புத்தகங்களை வழங்கினார். 



கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாளையொட்டி பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் என். ஜெயக்குமார், பதிவாளர் பொறுப்பு பி. வனிதா ஆகியோர் அம்பேத்கரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள், பல்கலைக்கழக எஸ்.சி. எஸ்.டி சங்க நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...