பேராசிரியை நிர்மாலா தேவியிடம் 2-வது நாளாக விசாரணை : கல்லூரி முதல்வர் நேரில் ஆஜர்

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவியிடம் போலீசார் 2-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக்கல்லூரியில் கணிதத் துறை உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வருபவர் நிர்மலாதேவி (வயது46). இவர் தன்னிடம் படிக்கும் 4 மாணவிகளிடம் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு தரும்படி போனில் வற்புறுத்திய ஆடியோ சமீபத்தில் வெளியானது. இது சமூக வலைதளங்களில் பரவியதால் கல்வித்துறை வரலாற்றில் பெரும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பூதாகரமாக வெடித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கொடுத்த புகாரின்பேரில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. முதல்கட்ட விசாரணை முடிவடைந்த நிலையில் பேராசிரியையாக நிர்மலாதேவி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் சார்பில் இது தொடர்பாக விசாரிக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. கல்லூரி நிர்வாகம் சார்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டதை அடுத்து, நிர்மலா தேவி மீது இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நேற்று அவரை அதிரடியாக கைது செய்தனர். இதனை அடுத்து, ஏ.டி.எஸ்.பி மதி அவரிடம் விசாரணையை தொடங்கினார். 

இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் நிர்மலா தேவியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். நிர்மலா தேவி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும், முழு விசாரணையும் வீடியோ பதிவு செய்யப்படுகின்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

இதனிடையே, தேவாங்கர் கலைக்கல்லூரியின் முதல்வர் பாண்டியராஜனை, அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு நேரில் அழைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Newsletter

Dengue Cases Declining in Coimbatore, Prevention Measures Intensified: Minister Arunraj

Health Minister K.G. Arunraj said dengue cases in Coimbatore have declined compared to last year, with preventive measur...

முதல்வர் விஜய்யின் பேச்சை கண்டித்து கோவையில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

முதல்வர் விஜய்யின் சட்டப்பேரவை பேச்சைக் கண்டித்து, செப். 12-ம் தேதி ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் செஞ்சிலுவை ச...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 புதிய மாணவர்களுக்கான வரவேற்பு விழா

கோவை ஒத்தக்கல்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 27-வது Batch முதலாமாண்டு மாணவர்களுக்கான YUVA 2026 Freshmen...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாட்டம்

துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் சிறப்பாக கடைப்பிடிக்க...

கோவை நீதிமன்ற வளாகத்தில் கைகலப்பு; போலீசார் விசாரணை

கோவை நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வழக்கறிஞரின் காரின் நான்கு டயர்களிலும் காற்றை இறக்கியதாக கூறப்படும் விவகாரத...

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...