கதுவா விவகாரம்: சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்

காஷ்மீர்: கதுவா-வில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


காஷ்மீர்: கதுவா-வில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் புகைப்படம் மற்றும் பெயரை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தைச் சேர்ந்த, 8 வயது சிறுமியை, ஒரு கும்பல் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து, கொடூரமாகக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில், காவல்துறை அதிகாரி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நாட்டில் உள்ள அனைத்து ஊடகங்களும் செய்தி வெளியிட்டன. செய்திகளில் பல்வேறு ஊடகங்கள் சிறுமியின் புகைப்படத்தையும் பெயரையும் வெளியிட்டன. 

18 வயதுக்குக் குறைவான குழந்தைகளின் புகைப்படம் அல்லது அவர்களது அடையாளங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தக்கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், சில ஊடகங்கள் சிறுமியின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிட்டது. 

இந்த நிலையில், சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது. அந்த அபராதத் தொகையை காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...