பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டியதற்கு மன்னிப்பு கோரினார் தமிழக ஆளுநர்

சென்னை: பெண் செய்தியாளர் கன்னத்தைத் தட்டிய சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கோரியுள்ளார்.


சென்னை: பெண் செய்தியாளர் கன்னத்தைத் தட்டிய சம்பவத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மன்னிப்பு கோரியுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நேற்று மாலை சென்னை ராஜ்பவனில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பேராசிரியரின் பாலியல் புகார் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த அவர், நிர்மலா தேவி யார் என்றே தனக்கு தெரியாது என்றார். மேலும், தனக்கு கொள்ளுப் பேரன் இருப்பதாக பதிலளித்த அவர், செய்தியாளர்களின் தொடர்ச்சியான கேள்விகளுக்குத் திணறினார்.

இது குறித்து தனியார் செய்தித்தாள் ஒன்றின் பெண் செய்தியாளர் மீண்டும் கேள்வியெழுப்ப, அந்த செய்தியாளரின் கன்னத்தில் செல்லமாக தட்டினார் ஆளுநர்.

இதற்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்த நிலையில், ஆளுநர், தான் அவ்வாறு நடந்து கொண்டதற்கு மன்னிப்பு கோரி பெண் செய்தியாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், " உங்கள் கேள்வி மிக அருமையாக இருந்தது. அதனால், தங்களை பாராட்டும் விதமாகவும், எனது பேத்தி போல் எண்ணியும் தான் கன்னத்தில் தட்டினேன். அது தங்களை காயப்படுத்தியதாக அறிகிறேன். அதனால், எனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...