அரசின் உரிமம் பெற்று மணல் எடுத்து வரும் லாரி சிறைபிடிப்பு..! : பழிவாங்கும் செயல் என நொய்யல் பாதுகாப்பு குழுவினர் புகார்

கோவை : திருச்சியில் இருந்து அரசின் உரிமம் பெற்று மணல் எடுத்து வந்த லாரியை உக்கடம் பைபாஸ் சாலையில் வைத்து கோவை வடக்கு தாசில்தார் மடக்கி பிடித்ததாக நொய்யல் பாதுகாப்பு குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர்.

கோவை : திருச்சியில் இருந்து அரசின் உரிமம் பெற்று மணல் எடுத்து வந்த லாரியை உக்கடம் பைபாஸ் சாலையில் வைத்து கோவை வடக்கு தாசில்தார் மடக்கி பிடித்ததாக நொய்யல் பாதுகாப்பு குழுவினர் புகார் தெரிவித்துள்ளனர். 

நொய்யல் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்த நிலையில், காவல் துறையினர் மற்றும் அரசு அதிகாரிகள் இரவு நேரங்களில் தொடர் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் நொய்யல் ஆற்றின் ஓரங்களிலும், சந்தேகத்திற்கு இடமாக சாலையில் செல்லும் லாரிகள், மாட்டு வண்டிகள் ஆகியவற்றையும் தடுத்து நிறுத்தி சோதனைகள் செய்துவருகின்றனர். 

அதேபோல, ஆலாந்துறை பகுதிகளில் மணல் அள்ளும் நபர்களைப் பிடிக்க அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் நொய்யல் பாதுகாப்பு குழு என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். இவர்கள் பல மணல் கொள்ளையர்களை அதிகாரிகளிடமும் பிடித்து கொடுத்துள்ளனர்.



"அரசின் உரிமம் பெற்று திருச்சியில் இருந்து வந்த மணல் லாரியை, நொய்யல் மண் எனக் கூறி எங்களை பழிவாங்கும் நோக்கில் அதிகாரிகளின் துணையுடன் மடக்கிப் பிடித்துள்ளனர். எங்களிடம் அனைத்து சான்றுகளும் உள்ளன. வாகனம் பழுதால் தேதி தான் தள்ளிவிட்டது. ஆனால், எங்களை தவறாக சித்தரித்து பழிவாங்கும் விதத்தில் மணல் கும்பல் செயல்படுகிறது," என நொய்யல் பாதுகாப்பு குழுவினர் கூறுகின்றனர்.

மணல் கடத்தலை தடுக்க அதிகாரிகளின் தீவிர எச்சரிக்கைகள் :

"கோவை மாவட்ட காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில பகுதிகளில் மணல் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்கள் தொடர்ந்து நடைபெறுவதாக செய்திகளில் வெளி வந்து கொண்டிருக்கின்றன. எனவே, இதனைத் தடுக்க தொடர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என சிறப்பு பிரிவு போலீசார், காவலர்களுக்கு எச்சரித்துள்ளனர். 

இதில், குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறும் காவலர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல, கோவை புறநகர் மாவட்ட சட்டவிரோத செயல்கள் குறித்த தகவல் இருப்பின் 9445846282 என்ற எண்ணிற்கு அழைத்து தகவல்கள் கொடுக்கலாம். அதேபோல, நொய்யல் ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்," என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் எச்சரித்துள்ளார்.

மணல் கொள்ளையை தடுக்க உதவிய நொய்யல் பாதுகாப்பு குழுவினரின் லாரியே மணல் கடத்தலுக்கு பயன்படுவதாக எழுந்த புகார் மீதான நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு நொய்யல் பாதுகாப்பு குழுவின் ரங்கநாதன் கூறியதாவது :- அதிகாரிகள் உத்தரவிற்கு பிறகும் தொடர்ந்து மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இருப்பினும், அதிகாரிகள் மணல் அள்ளுபவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

பல நேரங்களில் இந்த மணல் கொள்ளையை நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு வந்து குற்றவாளிகளைப் பிடித்து கொடுத்துள்ளோம். இந்தக் கோபத்தால் மணல் கொள்ளையர்கள் நாங்கள் முறையாக அரசு அனுமதியோடு திருச்சி மணச்சநல்லூரிலிருந்து கொண்டு வந்த மணலை நொய்யல் மணல் என அவதூறு பரப்பி வருகின்றனர். எங்களிடம் அனைத்துப் பதிவுகளும் உள்ளது. பர்மிட் தேதி மட்டும் தான் தள்ளி போகியுள்ளது. அதற்கு இவர்கள் முறையற்று தவறாக குற்றம் சாட்டுகின்றனர், என்றார்.

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...