டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வானவர்களுக்கு ஓர் எளிய முறை அறிமுகம்

குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளும் முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகம் செய்துள்ளது.


குரூப் தேர்வுகளில் வெற்றி பெற்றவர்கள் தங்களது அசல் சான்றிதழ்களை அரசு இ-சேவை மையங்களில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ளும் முறையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிமுகம் செய்துள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகின்ற தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கும், கலந்தாய்விற்கும் என இரண்டு முறை சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல வேண்டியுள்ளது. இந்த நடைமுறையினால் தேர்வர்களுக்கு ஏற்படும் போக்குவரத்து செலவினம், கால விரையம் உள்ளிட்ட அசௌகரியங்களை கருத்தில் கொண்டு, அசல் சான்றிதழ்களை சரிபார்ப்பு பணியினை எளிமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்வர்கள் தங்களுடைய விண்ணப்பத்தில் தெரிவித்துள்ள கல்வித்தகுதிக்கான அனைத்து அசல் சான்றிதழ்களையும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் நடத்தப்படுகின்ற அரசு இ-சேவை மையங்களில் அசல் சான்றிதழ்களை பக்கத்திற்கு ரூ. 5 (ஐந்து ரூபாய் மட்டும்), வீதம் செலுத்தி ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து ஒப்புகை சீட்டு பெற்றுக்கொள்ளலாம். மேற்கண்ட நடைமுறையானது கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்கள் மற்றும் மாவட்ட தலைநகரில் உள்ள அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம் நடத்தப்படும் அனைத்து அரசு இ-சேவை மையங்களிலும் வரும் 23-ம் தேதி முதல் செயல்படுத்தப்பட இருக்கிறது. 

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...