மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற விவகாரம்: தலைமறைவாக இருந்த பேராசிரியர் கைது

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவிப் பேராசிரியர் முருகனை போலீசார் இன்று கைது செய்தனர்.

பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் தலைமறைவாக இருந்த உதவிப் பேராசிரியர் முருகனை போலீசார் இன்று கைது செய்தனர்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயற்சி செய்த குற்றச்சாட்டின் பேரில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு அருப்புக்கோட்டை போலீசிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து நிர்மலாதேவியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி முடிவு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணையில் மாஜிஸ்திரேட்டு, நிர்மலாதேவியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார். நிர்மலாதேவியை துன்புறுத்தக்கூடாது என்றும், 25-ந் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் அவர் உத்தரவிட்டார். அவருக்கு தேவையான உணவு, உடை வழங்கவும் உத்தரவிட்டார். இதன்பின்னர் பேராசிரியை நிர்மலா தேவியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று 4-வது நாளாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரிடம் விசாரணையை தொடங்கினர்.

விருதுநகர் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் நடந்த இந்த விசாரணையில், பேராசிரியை நிர்மலா தேவி செல்போனில் யார் யாரிடம் எல்லாம் பேசினார் என்றும் என்ன பேசினார் என்றும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக தேடப்பட்டு வந்த உதவிப்பேராசிரியர் முருகனை போலீசார் இன்று கைது செய்தனர். இன்று வருகை பதிவேட்டில் கையெழுத்திட மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திற்கு வந்த போது போலீசார் அவரை கைது செய்தனர். 

இதனிடையே, நிர்மலாதேவியின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி., சோதனை நடத்திய போது டைரி சிக்கியது. அதில், பல்வேறு நபர்களின் பெயர்கள் இருந்தன. காண்டிராக்டர், பல்கலைக் கழக ஆசிரியர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இருந்ததை பார்த்த சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் அதில் இடம்பெற்றுள்ள நபர்கள் மற்றும் அவர்களது பின்னணி குறித்து முதல்கட்ட விசாரணையை தொடங்கி உள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகள் நிர்மலா தேவியுடன் வைத்திருந்த தொடர்புகள் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. உயர் அதிகாரிகள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பு வைத்திருந்த முக்கிய புள்ளிகளின் பட்டியலும் சேகரிக்கப்பட்டுள்ளது.

நிர்மலாதேவியுடன் தொடர்பு வைத்திருந்தவர்களில் மதுரையைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலரின் கணவரும் சிக்கியுள்ளார். இவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர். மேலும், நிர்மலாதேவியின் டைரியில் உள்ள முக்கிய புள்ளிகளிடமும் விசாரணையை முடுக்கி விட சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனால், நிர்மலாதேவியுடன் தொடர்பு வைத்திருந்த முக்கிய புள்ளிகளுக்கு கலக்கம் ஏற்பட்டுள்ளது. 

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...