பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் பெண்களுக்கு வழங்கப்படும் நிர்பயா நிதி ரூ. 800 கோடியாக அதிகரிப்பு

நீலகிரி : பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி, தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளதாக மகளிர் ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி, தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளதாக மகளிர் ஆணையர் கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். 

குன்னூரில் உள்ள வெறிநாய்க்கடி மருத்துவமனையான பாஸ்டியர் ஆய்வகத்தில் நடைபெற்ற மகளிர்களுடனான கலந்தாய்வு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது :- நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதை, மகளிர் ஆணையம் உன்னிப்பாக கவனித்து சம்பந்தப்பட்ட துறைக்கும், மாவட்ட ஆட்சியர்களுக்கும் உரிய அறிவுரைகளை அவ்வப்போது வழங்கி வருகிறது. மேலும், குற்றச் செயல்களை தடுப்பதற்கு தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் புகார்களை பதிவிட இலவச அழைப்பு எண்களை அளித்து வரப்படுகிறது. 

வெளிநாடுகளில் வாழும் இந்திய பெண்களுக்கு நடக்கும் குற்றச்செயல்களைக் கூட அந்த நாட்டு வெளியுறவுத்துறையுடன் தொடர் கொண்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. மேலும், தோட்டத்தொழில் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு, ஆண்களால் ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ அல்லது பாலியல் வன்கொடுமைகள் நிகழ்ந்தாலோ 1091 என்ற எண்ணிலோ அல்லது காவல்நிலையம் எண்ணான 100-க்கு தொடர்பு கொள்ள அவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து வருகிறோம். மேலும், பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்படும் மகளிருக்கு நிவாரணமாக வழங்கப்படும் நிர்பயா நிதி தற்போது ரூ. 800 கோடியாக அதிகரித்துள்ளது. எனக் கூறினார். 

Newsletter

கோவையில் கதவை பூட்டாமல் தூங்கிய மாணவர்கள்: 4 லேப்டாப், 3 செல்போன்கள் திருட்டு

கோவை குனியமுத்தூர் சுகுணாபுரம் வாடகை வீட்டில் தங்கியிருந்த கல்லூரி மாணவர்கள் கதவை பூட்டாமல் தூங்கியதை பயன்படுத்தி நள்ளிர...

கோவையில் சட்டவிரோத மது விற்பனை: 119 மதுபாட்டில்கள் பறிமுதல், 4 பேர் கைது

கோவை மாநகரில் அரசு அனுமதியின்றி கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மதுவிலக்கு அமல...

கோவையில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 27 அமர்வுகளில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் காலை இழந...

கொடுங்குற்ற வழக்குகளில் குடும்பத்தினருடன் நேரடித் தொடர்புக்கு FLPO: கோவை மாநகர காவல்துறையின் புதிய முன்னெடுப்பு

பாலியல் குற்றங்கள், POCSO, கடத்தல், கொலை, சந்தேக மரணம் உள்ளிட்ட கொடுங்குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்...

கோவை கல்லூரிகளில் மாணவர் பாதுகாப்பை வலுப்படுத்தும் ‘EDUCATION FIRST’ திட்டம்

கோவை மாநகர காவல்துறையின் ‘EDUCATION FIRST’ திட்டத்தின் கீழ் கல்லூரிகளுக்கு நியமிக்கப்பட்ட Police Liaison Officers-க்கான...

Truck Carrying Illegal Gravel Seized on L&T Bypass in Coimbatore

Officials from the Department of Geology and Mining in Coimbatore seized a tipper lorry carrying around three units of g...