குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் பைக்காரா சாலை: கோடை சீசனுக்காக சீரமைக்க சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை

நீலகிரி: நீலகிரியில் குண்டும், குழியுமாக காணப்படும் பைக்காரா சாலையை சீரமைக்க உதகை மாநராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..? என சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


நீலகிரி: நீலகிரியில் குண்டும், குழியுமாக காணப்படும் பைக்காரா சாலையை சீரமைக்க உதகை மாநராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..? என சுற்றுலா பயணிகளும், வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.



நீலகிரி மாவட்டம் அதிகப்படியான சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய மாவட்டமாகும். இதில், தோட்டக்கலை மற்றும் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான சுற்றுலா ஸ்தலங்கள் நிறைய உள்ளன. குறிப்பாக, அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை கவரும் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான பைக்காரா படகு இல்லமும் ஒன்று. உதகையிலிருந்து சுமார் 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பைக்காரா படகு இல்லத்தைக் காண, அண்டை மாநிலங்கள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

கூடலூர் செல்லும் சாலை பிரிவிலிருந்து பைக்காரா படகு இல்லம் செல்லும் சாலை பழுதடைந்த நிலையில் காணப்பட்டது. வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த சாலை செப்பனிடப்பட்டது. ஆனால், தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியுள்ளது. கூடலூர் பிரிவிலிருந்து பைக்காரா படகு இல்லத்திற்கு செல்லும் இந்த ஒரு கி.மீ. தூரமுள்ள சாலை, முறையாக வடிகால்கள் எடுக்கப்படாததால், மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிப்படைகின்றனர்.



எனவே, நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கியுள்ள நிலையில், படகு இல்லம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.



Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...