சுகாதார சீர்கேட்டின் உச்சத்தில் சங்கனூர் பள்ளம் : நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு கோரிக்கை

கோவை : பிளாஸ்டிக் கழிவுகளாலும், சாக்கடை கழிவுகளாலும் கோவை சங்கனூர் பள்ளத்தின் பல பகுதிகள் இன்று சுகாதார சீர்கேட்டின் உச்சமாக திகழ்கிறது.

கோவை : பிளாஸ்டிக் கழிவுகளாலும், சாக்கடை கழிவுகளாலும் கோவை சங்கனூர் பள்ளத்தின் பல பகுதிகள் இன்று சுகாதார சீர்கேட்டின் உச்சமாக திகழ்கிறது.



கோவை துடியலூர் அருகே உள்ள தடாகம் பகுதியில் உருவாகி கவுண்டம்பாளையம், புதுப்பாளையம், ரத்தனபுரி என ஓடி இறுதியில் சிங்காநல்லூர் சென்றடைகிறது சங்கனூர் பள்ளம். மழை நீரை பிரதானமாக கொண்டு கால்வாயாக பயணிப்பதே இதன் பிரதான நோக்கம். ஆனால், சாக்கடை கழிவுகளால் இன்று சங்கனூர் பள்ளம் முழுவதுமாக சாக்கடை பள்ளமாக மாறியுள்ளது.

சாக்கடை கழிவுகளால் மட்டும் சுகாதார சீர்கேடு ஏற்பட்ட நிலையில், தற்போது பிளாஸ்டிக் கழிவுகளால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் கேடாகவும் சங்கனூர் பள்ளம் மாறியுள்ளது. குறிப்பாக, ஏழாம் நம்பர் பாலம், கிருஷ்ண சாமி நகர், வசந்த் நகர், ரத்தினபுரி புதுப்பாலம், கவுண்டம்பாளையம் மெயின் பாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் பொதுமக்களும், வணிகர்களும், பிளாஸ்டிக், கோழிக்கழிவு, சாப்பாடு மீதம் உள்ளிட்ட கழிவுகளை நேரடியாகக் கொட்டி வருகிறார்கள்.

இது குறித்து அப்பகுதியில் வசித்து வரும் தனியார் அலுவலகம் செல்லும் இளைஞர் பிரபாகரன் கூறுகையில், "சாக்கடை கழிவுகளால் தூர்நாற்றும் வீசி வந்த நிலையில், தற்போது பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளால் தண்ணீர் பல இடங்களில் தேங்கியுள்ளது. இதனால், கொசு உற்பத்தியாகி பகல் நேரங்களில் கூட கடிக்கிறது. மழை காலங்களில் கிருமிகள் பரவவும் வாய்ப்புள்ளது" என்றார்.



"கோவை மாநகராட்சி சார்பாக அவ்வப்போது தூர்வாரி வந்தாலும், தற்போது தூர்வாராமல் குப்பைகளும், செடிகளும் வளர்ந்துள்ளன. இதன் காரணமாக, கழிவுகள் தேங்கி சுகாதாரமற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது" என சமூக ஆர்வலர் வை.குப்புராஜ் தெரிவித்தார்.

இது குறித்து கோவை மாநகராட்சி சுகாதார துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், "குப்பைகள் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையும் மீறி கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்," என்றார்.

மழை காலங்களில் டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், கோடை காலத்திலேயே சங்கனூர் பள்ளத்தில் கழிவுகள் அகற்றப்பட்டு சுகாதாரமான சூழ்நிலை உருவாக வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...