தாசில்தார் தேர்வு எழுத கழுதைக்கு ஹால்டிக்கெட்

ஜம்மூ காஷ்மீர் : ஜம்மூ காஷ்மீரில் நடைபெற இருக்கும் தாசில்தார் தேர்விற்கான ஹால்டிக்கெட்டில், கழுதை படம் அச்சிடப்பட்டுள்ள சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜம்மூ காஷ்மீர் : ஜம்மூ காஷ்மீரில் நடைபெற இருக்கும் தாசில்தார் தேர்விற்கான ஹால்டிக்கெட்டில், கழுதை படம் அச்சிடப்பட்டுள்ள சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, மாநில பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், தாசில்தார்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு நாளை (ஏப்.,29) நடைபெற உள்ளது. இந்தத் தேர்விற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெட் வழங்கப்பட்டது.

கச்சூர் கார் என்பவரது ஹால்டிக்கெட்டில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக கழுதையின் படம் இடம்பெற்றிருந்த சம்பவம் அவருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் அதனை, சமூகவலைதளங்களான பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்டவைகளில் பகிர்ந்தார். காட்டுத்தீ போல பரவிய இப்பதிவு, சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், அந்த ஹால்டிக்கெட் கேன்சல் செய்யப்பட்டு, விண்ணப்பதாரருக்கு புது ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று பணியாளர் தேர்வாணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மூ காஷ்மீர் பணியாளர் தேர்வாணைய ஹால்டிக்கெட்டில் விண்ணப்பதாரர் புகைப்படத்திற்கு பதிலாக விலங்கின் படம் இடம்பெறுவது இது முதல்முறையல்ல. இதற்கு முன்னதாக, 2015ம் ஆண்டில் தேர்வு ஹால்டிக்கெட்டில் பசுவின் படம் இடம்பெற்றிருந்ததாக பலர் தெரிவித்துள்ளனர். 

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...