அரசு வேலை எதற்கு? பீடா கடை வையுங்கள்: பா.ஜ.க. முதலமைச்சர் அட்வைஸ்

திரிபுரா: அரசு வேலைக்காக அலைவதை விடுத்து பீடா கடையை வைக்கலாம் என்று திரிபுரா பா.ஜ.க முதலமைச்சர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.

திரிபுரா: அரசு வேலைக்காக அலைவதை விடுத்து பீடா கடையை வைக்கலாம் என்று திரிபுரா பா.ஜ.க முதலமைச்சர் அட்வைஸ் வழங்கியுள்ளார்.

திரிபுரா-வில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சராக பிப்லக் குமார் பதவி வகித்து வருகிறார். இவர் அவ்வப்போது நகைப்புக்குரிய கருத்துக்களை பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். சமீபத்தில் மகாபாரதம் காலத்திலேயே, இணையம் கண்டுபிடிக்கப்பட்டு, பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று பேசி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். பின்னர் ஐஸ்வர்யா ராய்க்கு உலக அழகிப் பட்டம் கொடுத்தார்கள் சரி, டயானா ஹெய்டனுக்கு ஏன் கொடுத்தார்கள்? என கேள்வியை எழுப்பினார்.

இப்போது, பீடா கடையை வையுங்கள் என்ற அவருடைய அட்வைசும் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகி உள்ளது.

திரிபுராவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிப்லக் குமார் தேவ், "அரசாங்க வேலை பெற வேண்டும் என்று இங்கு இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்லும் நிலை உள்ளது. இது அவர்கள் நேரத்தை வீணாக்கும் செயலாகும். இளைஞர்கள் அரசியல்வாதிகளுக்குப் பின்னால் திரியாமல் பீடா கடையை வைத்து இருந்தால் அவர்களுடைய வங்கி கணக்கில் இப்போது ரூ. 5 லட்சம் இருந்து இருக்கும்." என்றார்.

Newsletter

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...

கோவையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் நண்பகல் 1 மணி வரை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்...

புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனத்தில் விநாயகருக்கு ராஜ அலங்காரம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை புலியகுளம் முந்தி விநாயகர் கோவிலில் 50 கிலோ சந்தனம் மற்றும் இரண்டு டன் மலர்களால் ரா...