சிட்டுக் குருவிகளை பாதுகாக்க இணைந்த கோவை தன்னார்வலர்கள்

கோவை: சிட்டுக் குருவிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை பாதுகாப்பது மற்றும் அவை பற்றிய ஆய்வு மேற்கொண்டு கூடுகள் அமைத்துக் கொடுக்கவும் 'நமது சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம்' என்ற திட்டம் கோவை மாநகராட்சி வளாகத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

கோவை: சிட்டுக் குருவிகள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவற்றை பாதுகாப்பது மற்றும் அவை பற்றிய ஆய்வு மேற்கொண்டு கூடுகள் அமைத்துக் கொடுக்கவும் 'நமது சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம்' என்ற திட்டம் கோவை மாநகராட்சி வளாகத்தில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.



சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு அமைப்பு, க்யூப் அமைப்பு, மகிந்த்ரா பம்ப் நிறுவனத்தைச் சேர்ந்த தன்னார்வலர்கள் கோவை மாநகராட்சியோடு இணைந்து இத்திட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.



"சிட்டுக் குருவிகள் இனம் அழிவை நோக்கிப் பயணிக்க பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று அதன் வாழ்விடம் அழிக்கப்பட்டு வருவதே. வீட்டைச் சுற்றியுள்ள தோட்டங்களில் வெளிநாட்டு செடிகளை வளர்ப்பதால் படர விடப்படும் முல்லை, அவரை போன்ற தாவரங்கள் குறைந்து விட்டன. எனவே அவைகளில் இருந்து வெளியே வரும் புழுக்களை சிட்டுக் குருவிகள் தன் குஞ்சுகளுக்கு உணவாக கொடுக்க முடிவதில்லை. மேலும், இப்போது யாரும் வீட்டு முற்றங்களில் தானியங்களை புடைப்பதோ, உணவு பாத்திரங்களை கழுவுவதோ இல்லை. இதனால் குருவிகளுக்கு உணவு கிடைப்பதில்லை. முக்கியமாக, கான்கிரீட் கட்டிடங்கள் குருவிகள் கூடுகட்ட ஏற்றதாக இருப்பதில்லை. இவை அனைத்தையும் சரிசெய்து சிட்டுக் குருவிகளை பாதுகாப்பதற்காக இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது." என்கிறார் 'க்யூப்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வின்னி பீட்டர்.



இத்திட்டத்தில், கோவை மாநகரில் சிட்டுக்குருவிகள் காணப்படுகின்ற இடங்கள் முதலில் கண்டறியப்பட்டு, அங்கு ஒவ்வொரு மாதமும் சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்படும். அதன் தொடர்ச்சியாக அவ்விடங்களில் உள்ள மக்களின் பங்களிப்போடு சிட்டுக் குருவிகளுக்காகவே அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட 3000 குருவிக் கூடுகள் அமைக்கப்படும். அக்கூடுகள் ஆராய்ச்சி மாணவர்கள் மூலமாக கண்காணிக்கப்பட்டு சிட்டுக் குருவிகள் பற்றிய ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. ஆண்டுதோறும் இத்திட்டத்தின் ஆராய்ச்சி முடிவுகள் முறைப்படி வெளியிடப்பட உள்ளது.

முதற்கட்டமாக மாநகராட்சி அலுவலகங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் குருவிக் கூடுகள் பொருத்தி ஆய்வு மேற்கொள்ளும் பணிகள் இன்று தொடங்கியுள்ளது.



மேலும், சிட்டுக் குருவிகள் உள்ள இடங்களில் கூடுகள் அமைக்க விருப்பம் உள்ளவர்கள் '99433 20303' என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் இலவசமாக கூடுகள் அமைத்துத் தரப்படும் என்று தன்னார்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...