உதகை தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி: சுற்றுலாப் பயணிகளை கவர திட்டம்

நீலகிரி: உதகையில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நேற்று முதல் தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

நீலகிரி: உதகையில் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க நேற்று முதல் தாவரவியல் பூங்கா சாலையில் இரவு நேர அங்காடி தொடங்கப்பட்டுள்ளது.

உதகையில் வரும் 5-ம் தேதி முதல் கோடை விழா தொடங்கவுள்ள நிலையில், நடப்பாண்டு கோடை சீசனை சுற்றுலாப் பயணிகள் பல புதுமைகளுடன் கண்டு களிக்கும் வகையில் சுற்றுலா கமிட்டி பல்வேறு ஏற்பாடுகளைச் செய்து வருகிறது.

அதன் முதற் கட்டமாக உதகை தாவரவியல் பூங்கா சாலையில் கோடை விழாவில் முதல் முறையாக இரவு நேர அங்காடி அமைக்க முடிவு செய்யப்பட்டது.



உதகை தாவரவியல் பூங்கா சாலையில் இனி பொதுமக்கள் இரவில் பல்வேறு பொருட்களை வாங்கும் வகையில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த இரவு நேர அங்காடிகளை நேற்று மாவட்ட ஆட்சி தலைவர் இன்னசென்ட் திவ்யா தொடங்கி வைத்தார். அந்த அங்காடி மாலை 7 மணி முதல் காலை 9.30 மணி வரை நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேர அங்காடி விற்பனை நடைபெறுவதால் குறிப்பிட்ட இடத்தில் சீசன் முடியும் வரை போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...