கோவையில் ஒரு நாளில் 6 செ.மீ மழை பதிவு

கோவை : மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவின் படி 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

கோவை : மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவின் படி 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

கோவையில் கடந்த நான்கு நாட்களாக சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் இந்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே நேரத்தில் மழையின் போது நகரின் பல இடங்களில் மின்தடை ஏற்படுவதால் பொதுமக்கள் அவதியும் அடைந்தனர். 

இந்த நிலையில், நேற்று இரவு சுமார் 10 மணியளவில் நகரின் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. மாவட்டம் முழுவதும் பெய்த இந்த மழை 6 செ.மீ-ஆக பதிவாகியுள்ளது. மாநகர பகுதிகளில் மட்டும் 2 முதல் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பகுதிகளில் கோவைக்கு முன்னதாகவே இந்த மழை தொடங்கியது. திருப்பூரில் அதிகபட்சமாக 12 செ.மீ வரை மழை பெய்தது. சத்தியமங்கலத்தில் 10 செ.மீ மழையும் பெய்துள்ளது. 

கொங்கு மண்டலத்தில் இன்னும் சற்று நாட்களுக்கு இந்த மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...