பள்ளி தேர்வுகள் காரணமாக 'நம்ம ஊர் சந்தை' நிகழ்ச்சி ஒத்திவைப்பு

கோவை : பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுவதால் 'நம்ம ஊர் சந்தை' நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை : பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறுவதால் 'நம்ம ஊர் சந்தை' நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயல்வாகை என்ற தன்னார்வலர் அமைப்புகள் சார்பில் விவசாயிகளால் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைகள், கோழி மற்றும் முட்டை போன்ற பொருட்கள் ஒரே இடத்தில் 'நம்ம ஊர் சந்தை' என்ற பெயரில் விற்பனை செய்யும் திட்டம் கோவையின் பல்வேறு இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

மாநகராட்சி பள்ளி

அதன்படி, நம்ம ஊர் சந்தை திட்டத்தை கோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் செயல்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தினர் அனுமதி வழங்கினர். இதன் ஒரு பகுதியாக நம்ம ஊர் சந்தை திட்டம் வடகோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் கடந்த மாதம் 9-ம் தேதி நடைபெற்றது. 

இந்த சந்தையில் 20-க்கும் மேற்பட்ட கடை அமைக்கப்பட்டு இருந்தது. குறைந்த விலையில் காய்கறிகள் உள்ளிட்ட பல வகை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இந்த சந்தையில் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர். 

இந்த நிலையில், வரும் 13-ம் தேதி வடகோவை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மீண்டும் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. ஆனால், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் காரணத்தால் இந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

மீண்டும் 'நம்ம ஊர் சந்தை' நடைபெறும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர். 

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...