தொடங்கியது அக்னி நட்சத்திரம் , கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

கோவை: அக்னி நட்சத்திரம் தொடங்கிய போதிலும், கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோவை: அக்னி நட்சத்திரம் தொடங்கிய போதிலும், கோவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கோடைக் காலம் தொடங்கியது முதல் கோவையில் வெயில் வாட்டி வந்தாலும், அவ்வப்போது மழை பெய்து குளிர்ந்த சூழ்நிலையும் நிலவி வருகிறது. இதனிடையே, இன்று தொடங்கிய அக்னி நட்சத்திரம் 21 நாட்கள் நீடித்து, அதாவது மே 28-ம் தேதி அன்று நிறைவு பெறும். இது குறித்து கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் காலநிலை ஆராய்ச்சி மைய தலைவர் பன்னீர்செல்வம் கூறுகையில், "கோவையில் அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் மழைக்கும் வாய்ப்புள்ளது. 

இதனிடையே, பகல்நேர வெப்ப நிலையானது 33.5 டிகிரி செல்சியஸாகவும், இரவு நேர வெப்பநிலை 22 டிகிரி செல்சியாகவும் நிலவ வாய்ப்புள்ளது.

கோவையில் கோடை மழை 130 மில்லி மீட்டர் எதிர்பார்த்த நிலையில், தற்போது 140 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும், மழையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மே 16 மற்றும் 17-ம் தேதிகளில் வெயிலின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன்பின், படிப்படியாக கோவையில் வெயிலின் தாக்கம் குறையும். 

அதேசமயம், கிருஷ்ணகிரி, சேலம், திருச்சி, வேலூர், ராமநாதபுரம், ஈரோடு மற்றும் திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் அதிகமாகவே காண வாய்ப்புள்ளது. காற்றின் வேகம் கோவையைப் பொறுத்தவரையில் 12 கிலோ மீட்டர் வரை வீச வாய்ப்புள்ளது," என்றார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...