கோவை தி.மு.க., எம்.,எல்.,ஏ., கார்த்திக்கின் முன்ஜாமீன் மனு 10-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

கோவை : கோவையில் குட்கா ஆலையின் சோதனையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், தி.மு.க., எம்.,எல்.,ஏ., கார்த்திக் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கோவை : கோவையில் குட்கா ஆலையின் சோதனையின் போது போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில், தி.மு.க., எம்.,எல்.,ஏ., கார்த்திக் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணை 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா ஆலையில் போலீசார் கடந்த வாரம் சோதனை நடத்தினர். அப்போது, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இது தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, குட்கா ஆலையில் போலீசார் சோதனை நடத்திய போது, எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய தி.மு.க.,வினர் 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

மேலும், தி.மு.க., சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, சிறையில் அடைக்கப்பட்ட 7 பேர் நிபந்தனை ஜாமீனில் விடுக்கப்பட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தி.மு.க., எம்.எல்.ஏ கார்த்திக் முன்ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி குணசேகரன் வழக்கை வரும் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...