லட்சிய கனவுகளுடன் நாளை நீட் தேர்வை எதிர்கொள்ளும் லட்சக்கணக்கான மாணவர்கள்

மருத்துவப் பணியை குறிக்கோளாகக் கொண்டு, நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நீட் தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.


மருத்துவப் பணியை குறிக்கோளாகக் கொண்டு, நாடு முழுவதும் நாளை நடைபெற உள்ள நீட் தேர்வை லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

இந்தியா முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் 2018-19-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (நீட்) சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்த இருக்கிறது. இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு நாளை (மே 6) நடைபெறுகிறது. இந்தத் தேர்வில் கலந்து கொள்ள இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களுக்கான தேர்வு மையங்கள், அண்டை மாவட்டங்களிலோ அல்லது மாநிலங்களிலோ போடப்பட்டுள்ளது. இதனால், தேர்வு எழுதும் மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 



அண்டை மாநிலங்களில் தேர்வு மையங்களைக் கொண்ட மாணவர்களுக்கு அரசு மற்றும் பல்வேறு தரப்பினர் சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், கோவை மாவட்டம் புளியம்பட்டியில் உள்ள கே.ஓ.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற எம். பாரதி என்பவருக்கு கணுவாயில் உள்ள தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்கள் ஒதுக்கீடு தொடர்பாக அவர் கூறும்போது :- நீட் தேர்வுக்காக நான் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இருந்து தயாராகி வருகிறேன். பொதுத் தேர்வுகளுக்கு தேர்வு மையங்கள் ஒதுக்கப்படுவதைப் போலவே, நீட் தேர்வுக்கும் ஒதுக்கப்படும் என நினைத்தேன். அதுதான் தேவை. ஆனால், அதை நான் எதிர்பார்க்கவில்லை," என்றார்.   

இதேபோல, கிருஷ்ணகிரி மாவட்டம் ரோயக்கோட்டைப் பகுதியைச் சேர்ந்த விவசாயி வெங்கடாச்சலம். இவரது, மகன் முத்துக்குமார் நாளை நடக்கும் நீட் தேர்வை எழுத உள்ளார். " எனது மகன் இங்குள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகிறான். அவனது தேர்வு மையம் அருகில் இல்லை. தேர்விற்காக தற்போது, சேலம் புறப்பட்டுச் செல்கிறோம்." என தனது மகனின் தேர்வு குறித்து வெங்கடாச்சலம் கூறினார். 

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வு மையங்கள், கேரளா, ஜெய்ப்பூர் என பல்வேறு மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருப்பதற்கு, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் என். ரவிசங்கர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவர் கூறுகையில், "தேர்வுக்காக மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் மற்ற மாநிலங்களுக்கு செல்வது நியாயமற்றது. வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வு எழுத முடிந்தவர்களுக்கு இந்த முறை சரிபட்டு வரும். ஆனால், ஏழை மாணவர்களுக்கு பொருந்தாது. எனவே, மாநிலத்தில் பயிற்சி அதிகளவிலான பயிற்சி மையங்களை திறக்கவும், மாணவர்களுக்கு உதவும் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்," எனத் தெரிவித்தார். 

இதேபோல, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தேர்வு மையம் கொண்ட தமிழக மாணவர்களுக்கு, அங்குள்ள தமிழ்சங்கம் உதவி செய்ய முன்வந்துள்ளது. இது தொடர்பாக, அதன் தலைவர் வி.ஆர். சவுந்தர்நாயகி கூறியதாவது :- இன்று மதியம் வரையில் எந்த மாணவர்களும் உதவிகோரி அழைக்கவில்லை. இருப்பினும், உதவிகள் ஏதாவது தமிழக மாணவர்களுக்கு தேவைப்படுமா..? எனத் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம், இவ்வாறு கூறினார். 

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...