தமிழகத்தில் 2015-ம் ஆண்டு முதல் இன்று வரை மின்வெட்டு அறவே இல்லை : மின்வாரிய தலைமை அலுவலகம்

கோவை : பருவநிலை காரணமாக ஏற்படும் பழுதினால் ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டதே தவிர, 2015-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் இன்று வரை மின்வெட்டு அறவே இல்லை என மின்வாரிய தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.

கோவை : பருவநிலை காரணமாக ஏற்படும் பழுதினால் ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டதே தவிர, 2015-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் இன்று வரை மின்வெட்டு அறவே இல்லை என மின்வாரிய தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- கோவை, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, சேலம் ஆகிய மேற்கு தொடர்ச்சி பகுதிகளிலும் மற்றும் கிருஷ்ணகிரி, மதுரையிலும் கடந்த சில நாட்களாக பரவலாகக் கோடை மழை பலத்த காற்று, இடி, மின்னலுடன் பெய்தது.  பலத்த காற்றினால் ஆங்காங்கே மரங்கள் மின் பகிர்மான கட்டமைப்பின் மீது வீழ்ந்ததன் காரணமாக மின் கம்பிகள் அறுந்தும் மற்றும் மின்கம்பங்கள் சாய்ந்ததனாலும் மின்தடை ஏற்பட்டது.

 

இதன் காரணமாக, கடந்த ஏப்., 30-ம் தேதி முதல் கோவை மண்டலத்திலுள்ள கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் 416 எண்ணம் மின்பாதைகளுக்கும், 19 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. ஈரோடு மண்டலத்திலுள்ள ஈரோடு, நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் 173 எண்ணம் மின்பாதைகளுக்கும், 6 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் 200 எண்ணம் மின்பாதைகளுக்கும், 21 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மின் பகிர்மான வட்டத்திலும் 21 எண்ணம் மின்பாதைகளுக்கும், 15 எண்ணம் மின்மாற்றிகளுக்கும் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. சுமார் 865 மின்கம்பங்கள், 61 மின்மாற்றிகள் சேதமடைந்தன.

  

பலத்த காற்று மழையினால் பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் ஆகியவை உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு, மின் நுகர்வோர்களுக்கு சீரான மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. பருவநிலை காரணமாக மின்சாதனங்களில் ஏற்படும் பழுதினால், ஓரிரு இடங்களில் மின்தடை ஏற்பட்டது. தவிர மின்வெட்டு என்பது தமிழகத்தில் கடந்த 05.06.2015 முதல் அறவே இல்லை என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு மின்வாரிய தலைமை அலுவலக செய்தி வெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...