கோவையில் அதிகாரி போல் நடித்து பொதுமக்களிடம் பணம் வசூலித்தவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கணவர் இல்லாத பெண்களிடம், அரசின் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கணவர் இல்லாத பெண்களிடம்,  அரசின் உதவித்தொகை வாங்கித் தருவதாக கூறி பணம் வசூலில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.



திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் செந்தில்(50). இவர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று படிப்பறிவற்ற பொதுமக்களிடம் ஏமாற்றி பணம் சம்பாதித்து வந்துள்ளார். இந்த நிலையில், இவர் பொள்ளாச்சியில் உள்ள ஜமீன் ஊத்துக்குளி பகுதியில், தான் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இருந்து வருவதாகக் கூறியதோடு, கணவன் இல்லாத பெண்களிடம், அரசின் விதவை உதவித் தொகை ரூ. 2,500 மாதந்தோறும் வாங்கித் தருவதாக கூறினார். மேலும்,  உதவித் தொகை பெறுவதற்கு முன் பதிவு தொகை செலுத்த வேண்டும் என்று கூறிய அவர் பெண்களிடம் ரூ. 500 வசூலித்தார். 

அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் விசாரித்தனர். அப்போது,  போலியாக மோசடி செய்வது தெரியவந்துள்ளது. தொடர்ந்து செந்திலை பிடித்து அவரது கையில் இருந்த பையில் சோதனை செய்தனர். இதில் கோவை மாநகரில் வயது முதிர்ந்த பெண்களிடம் பணம் ஏமாற்றியதும் தெரியவந்தது. 

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், போலி அரசு அலுவலரை சரமாரியாக தாக்கினர். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மோசடியில் ஈடுபட்ட நபரைப் பிடித்தனர். அப்போது, தான் ஒரு அனாதை என்று கூறிய செந்தில் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். இதனால் மனம் இறங்கிய போலீசார் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அறிவுரை கூறி  அனுப்பி வைத்தனர். 



இந்த சம்பவம் குறித்த அப்பகுதியை சேர்ந்த சதாம் கூறுகையில், " அதிகாரி போல் நடித்து வயதானவர்களிடம் பணம் பறித்துள்ளார். சந்தேகத்தின் பேரில் அவரிடம் விசாரித்த போது தான் அவர் மோசடி ஆசாமி என்பது தெரியவந்தது. வறுமையில் இருக்கும் முதியவர்களைக் குறி வைத்து ஏமாற்றும் இவர் போன்ற நபர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்." என்றார். 

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...