திருப்பூரில் இயற்கை முறையில் விளைந்த உணவு வகைகளை விற்பனை செய்யும் மாதச் சந்தை

திருப்பூர் : நண்பர்கள் இயக்கம் சார்பாக திருப்பூரில் இயற்கை முறையில் விளைந்த உணவு வகைகளை விற்பனை செய்யும் மாதச் சந்தை இன்று நடைபெற்றது.

திருப்பூர் : நண்பர்கள் இயக்கம் சார்பாக திருப்பூரில் இயற்கை முறையில் விளைந்த உணவு வகைகளை விற்பனை செய்யும் மாதச் சந்தை இன்று நடைபெற்றது. 

திருப்பூரில் மங்கலம்  தெரு கே.ஆர்.சி சிட்டி சென்டர் வளாகத்தில் இயற்கை முறையில் தயாரித்த உணவுப் பொருள்களுக்கான மாதச் சந்தை இன்று நடைபெற்றது. இந்த சந்தையில், திருப்பூர் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் வந்து தங்கள் வீட்டிற்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கிச் சென்றனர். சந்தையில் இடம் பெற்ற பொருட்கள் அனைத்தும் இயற்கை விவசாய  முறையில் தயாரிக்கப்பட்டதாகவும்  ரசாயனம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்காமல் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி விளைவிக்கப்பட்டவை என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். 







உணவு வகைகள்

இந்த மாதச் சந்தையில் பல்வேறு வகையான உணவுப் பொருட்கள் இடம் பெற்றிருந்தன. பல்வேறு வகையான பாரம்பரிய அரிசி வகைகள், சிறுதானியம், கருப்பட்டி பலகாரம், சிறுதானிய தின்பண்டங்கள், மரச்சக்கு எண்ணெய், நாட்டுக் கம்பங்கூழ், மலைத்தேன், முருங்கைத் தேன், சத்துமாவு, நாட்டுச் சர்க்கரையை பயன்படுத்திய பழச்சாறு, கீரைகள், கிழங்கு வகைகள், காய்கறிகள், மண்ணால் செய்த மண்பாண்டங்கள், மேய்ச்சல் மூலம் வளர்க்கப்பட்ட நாட்டுக்கோழிகள், நாட்டுக்கோழி முட்டை மற்றும் வாத்து முட்டை என பல்வேறு விதமான பொருட்கள் இடம் பெற்றிருந்தன. 



மேலும், சமையலுக்குத் தேவையான சமையல் பொடி, குளிப்பதற்கு குளியல் பொடி, பற்பொடி மற்றும் தேயிலை சேர்க்காமல்,  புதினா, அரம்பட்டை சேர்த்த தேநீர் பொடி என பல வகையான பொடி வகைகளும் இடம் பெற்றிருந்தன. 



இது குறித்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அழகேஷ்வரி கூறியதாவது:- 

இந்த சந்தை மாதத்தில் ஒரு முறை நடைபெறுகிறது.  இங்கு சுமார் 30-க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. இங்குள்ள அனைவரும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், சத்திய மங்கலம், பல்லடம் மற்றும் திண்டுக்கல் என்று வெவ்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ளனர். இங்கு அமைக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வாடகை ஏதும் வசூலிப்பது இல்லை. வரும் செலவினங்களை நாங்களே பகிர்ந்து கொள்கிறோம். 

விதிமுறைகள் 

இங்கு கடைகள் அமைப்பதற்கு சில விதிமுறைகள் உள்ளன. யாராவது இங்கு கடை அமைக்க விரும்பினால், நாங்கள் அவர் இருக்கும் இடத்திற்கு நேரடியாகச் சென்று, அங்கு இயற்கை முறையில் தான் விவசாயம் செய்யப்படுகிறதா? உணவுப் பொருட்களில் கலப்படம் இல்லாமல் இயற்கை முறையில் தயார் செய்கிறார்களா?  என்று ஆய்வு மேற்கொண்ட பின்னரே கடைகள் அமைப்பதற்கு அனுமதி அளிக்கிறோம்.

மேலும், பிளாஸ்டிக் உபயோகிப்பதைத் தடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்லும் பொருட்களை  துணிப் பைகளில்  மட்டுமே கொடுத்து அனுப்புகிறோம்.  தின்பண்டங்கள் வாங்கிச் செல்பவர்களுக்கு  வாழை இலை, மற்றும் பூவரசம் இலை கொடுக்கப்படுகிறது. தற்போது பல்வேறு இடங்களிலும் இயற்கை அங்காடிகள் அமைந்துள்ளன. ஆனால், அங்குள்ள பொருட்கள் அனைத்தும் இயற்கை முறையில் தயாரிக்கப்பட்டதா? என்பது தெரியவில்லை. ஆனால், இங்குள்ள அனைத்துப் பொருட்களும் இயற்கை முறையில் தயாராகின்றன. அதனால் வாடிக்கையாளர்கள் இங்கு அதிகமாக வருகின்றனர். 

இவ்வாறு அவர் கூறினார். 

மற்ற இயற்கை அங்காடிகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இங்கு விலை குறைவாக உள்ளதாகவும் சந்தைக்கு வந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...