மாணவர்களிடையே அறிவியல் பூர்வமான சிந்தனையை வளர்க்க பயிற்சி

கோவை : மாணவர்களிடையே அறிவியல் பூர்வ சிந்தனைகளை வளர்க்கும் விதமாக மூன்று நாள் பயிற்சி வகுப்பு வரும் 16-ம் தேதி தொடங்குகிறது.


கோவை : மாணவர்களிடையே அறிவியல் பூர்வ சிந்தனைகளை வளர்க்கும் விதமாக மூன்று நாள் பயிற்சி வகுப்பு வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. 

கோவையைச் சேர்ந்த இளைஞர்கள் 'ஸ்கூல் ஆஃப் சைன்ஸ்' என்ற அமைப்பு ஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பு சார்பில் வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மாணவர்களிடையே அறிவியல் பூர்வ சிந்தனைகளை வளர்க்கும் விதமாக பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. பார்க் ரெசிடென்சி அரங்கில் நடைபெறும் இந்த கலந்து கொள்ள மாணவர்களுக்கு ரூ.2,500 பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. 

இது குறித்து 'ஸ்கூல் ஆஃப் சைன்ஸ்' அமைப்பைச் சேர்ந்த வினீத் நமக்களித்த பேட்டியில் கூறியதாவது :- 

அறிவியல் குறித்து குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பயிற்சி வகுப்பின் குறிக்கோளாகும்.  6 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கென நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பு அறிவியல் மீது அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தும். அவர்களை அறிவியல் பூர்வமாக சிந்திக்க வைக்கும். பொதுவாக 10 முதல் 14 வயதுடைய மாணவர்கள் அறிவியல் குறித்து அறிந்து கொள்ள தொடங்குகிறார்கள்.  

நாங்கள் அவர்களுக்கு செய்முறை விளக்கப் பயிற்சி மூலம் அறிவியலை உணர்த்துவோம்.  இந்த பயிற்சி வகுப்பில் அடிப்படை இயற்பியல், காமிரா செயல்பாடு, வாகன இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்படும். மேலும், தகவல்களைப் பெற பின்வரும் எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். +91 80984 47132. 

இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...