விளை நிலங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்கும் 'தேனீ வேலி': ஆர்வம் காட்டும் விவசாயிகள்

மேட்டுப்பாளையம்: விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 'தேனி வேலி'க்களை அமைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்: விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டு யானைகளை விரட்டுவதற்காக 'தேனி வேலி'க்களை அமைக்கும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை, காரமடை போன்ற பகுதிகளில் மனித - யானை மோதல்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. பல்வேறு காரணங்களினால் வனத்தை விட்டு வெளியேறும் யானைகள் அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாயப் பயிர்களை நாசப்படுத்துவதோடு, இதனைத் தடுக்க முயலும் மனிதர்களையும் தாக்கி கொன்றுவிடும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

இதேபோல, இம்மோதலில் யானைகளும் மின்சாரம் வைத்து மனிதர்களால் கொல்லப்பட்டு வருகின்றன. எனவே, இந்த மனித - யானை மோதலைக் கட்டுப்படுத்த யானை தடுப்பு அகழிகள், சோலார் மின் வேலிகள் என எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் போதிய பலனை தரவில்லை. இதனால், பயிர் மற்றும் உயிர் இழப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. 

இந்நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் யானைகளின் ஊடுருவலை தடுப்பதற்காக, நடைமுறையில் உள்ள தேனீ வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும், வனத்துறையினரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். அதன்படி, விவசாய தோட்டங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள சோலார் மின் வேலியின் அருகில் சீரான இடைவெளியில் மர பெட்டிகளாலான தேன் கூடுகளை அமைத்து, அதில் தேனீக்களை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு பெட்டியிலும் ராணி தேனீ உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தேனீக்கள் இருப்பதாலும் இவை நாள் முழுவதும் தேன் சேகரிப்பு பணியில் சுறுசுறுப்புடன் இயங்கியபடி இருக்கும். இவற்றின் இடைவிடாத ரீங்கார ஒலியைகேட்டு யானைகள் இதன் அருகில் கூட வருவதில்லை.

ஐந்து டன் எடை கொண்ட பிரமாண்ட யானையின் துதிக்கையில் உள்ள மென்மையான பகுதியில் ஒரு கிராம் எடை மட்டுமே கொண்ட தேனீ கொட்டினால் அதனை யானைகளால் தாங்க இயலாது என்ற காரணத்தினாலேயே அவை விலகி ஓடுகின்றன என்கின்றனர் வன உயிரின ஆர்வலர்கள். 

குறிப்பாக, யானைகளின் ஊடுருவல் அதிகமாக உள்ள மலையடிவார கிராம விவசாயிகள், இதேபோல, தேனீ வளர்ப்பில் ஈடுபடுவதன் மூலம் யானைகளால் ஏற்படும் பயிர் சேதங்களைத் தடுப்பது மட்டுமின்றி தூய்மையான தேன் சேகரித்து கூடுதல் வருவாயும் கிடைக்கும். மேலும், தேனீக்களின் மகரந்த சேர்க்கையினால் மகசூலும் நாற்பது சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். 

தேனீக்கள் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இலவச பயிற்சியும் அளிக்கப்படுவதால் மேட்டுப்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் தற்போது தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இம்முயற்சி பரவலாக்கப்பட்டு பலனளிக்க துவங்கும் போது மனித - யானை மோதல்கள் குறைந்து இழப்புகள் பெருமளவு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...