நீலகிரியில் களைகட்டும் கோடைவிழா: 8-வது வாசனை திரவியக் கண்காட்சி தொடக்கம்

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் 8-வது வாசனை திரவியக் கண்காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் 8-வது வாசனை திரவியக் கண்காட்சியை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுனன் மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.



நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தற்போது களைகட்டியுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுலாத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்தாண்டு கோடை விழாவின் சிறப்பாக நீலகிரியின் 200-வது வயது கொண்டாடப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் முதல் கோடை விழாவான காய்கறி கண்காட்சி 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தொடங்கப்பட்டது.



தொடர்ந்து, கூடலூரில் உள்ள புனித தாமஸ் பள்ளி வளாகத்தில் 2-வது விழாவான 8-வது வாசனை திரவிய கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் 14 வாசனை திரவிய பொருட்களான குருமிளகு, ஏலக்காய், கிராம்பு போன்றவற்றை கொண்டு 14 அடி அகலம், 9 அடி உயரம் கொண்டு சுமார் 300 கிலோவால் உருவாக்கப்பட்ட வள்ளுவர் கோட்டம் அமைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும், பல்வேறு அரசு துறைகள் சார்பாக இக்கண்காட்சியில் அரங்குகள் அமைக்கப்பட்டு, அந்தந்த துறையின் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, 3 நாள் நடைபெறும் வாசனை திரவிய கண்காட்சியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி உள்ளுர் மக்களும் கண்டு ரசித்து வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...