திருப்பதியில் பா.ஜ.க., தலைவர் அமித்ஷாவின் கார் மீது தாக்குதல் : தெலுங்கு தேச தொண்டர்கள் கைது

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்ற பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷாவின் வாகனம் மீது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்யச் சென்ற பா.ஜ.க., தேசிய தலைவர் அமித்ஷாவின் வாகனம் மீது தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரம் நேற்று (வியாழக்கிழமை) மாலையுடன் நிறைவடைந்தது. பிரச்சாரத்தை முடித்துவிட்டு இன்று பா.ஜ.க., தலைவர் அமித் ஷா திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன்பின்பு, கோயிலில் இருந்து கார் மூலம் ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது, திருப்பதி மலை அடிவாரத்தில் கருப்பு கொடியுடன் காத்திருந்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள், அமித்ஷாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.

மேலும், அமித் ஷாவின் காரை மறிக்க முயன்றனர். அப்போது, அமித்ஷா மற்றும் பா.ஜ.க., தொண்டர்கள் சென்ற கார் ஒன்றின் கண்ணாடியை தெலுங்கு தேசம் கட்சியினர் உடைத்தனர். இதனால், பா.ஜ.க., தெலுங்கு தேசம் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. இதன்பின், கார் கண்ணாடியை உடைத்த தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்களை போலீஸார் கைது செய்தனர். இதனால், ஆவேசம் அடைந்த தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தினர்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டதாக ஆளும் தெலுங்கு தேசம் குற்றம்சாட்டி வருகிறது. இதனால், மத்தியில் பாஜகவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் விலக்கிக் கொண்ட நிலையில், அமித்ஷா கான்வாய் மீது அக்கட்சியினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...