சரிந்த மின்கம்பங்களை சீரமைக்காததால் மின்சாரம் இன்றி அவதி : மின்வாரிய அதிகாரிகளைக் கண்டித்து சாலைமறியல்

திருப்பூர் : திருப்பூரில் வீசிய சூறைக்காற்றிற்கு சரிந்த மின்கம்பங்களை சீரமைக்காததால் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : திருப்பூரில் வீசிய சூறைக்காற்றிற்கு சரிந்த மின்கம்பங்களை சீரமைக்காததால் கடந்த 2 நாட்களாக மின்சாரம் இன்றி அவதிப்பட்டு வந்த பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 



திருப்பூரில் நேற்று முன்தினம் மாலை சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த மழைக்கு மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவை சரிந்து பல்வேறு சேதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக, மங்கலம் சாலை குள்ளேகவண்டன்புதூர், குளத்துப்புதூர், சிண்ணான்டி பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மரங்களும், மின்கம்பங்களும் சரிந்தன. 

இதனால், சனிக்கிழமை மாலையில் இருந்தே இப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், மின்கம்பங்கள் சாய்ந்து 2 நாட்களாகியும், அதனை சீர்செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 



மழையால் விழுந்த மரங்களை அகற்றவோ, மின்கம்பங்களை சீரமைக்கவோ எந்த அதிகாரியும் தங்கள் பகுதிக்கு வரவில்லை. மரங்களை தாங்களே வெட்டி அகற்ற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சாட்டினர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் சீரமைப்பு பணிகள் விரைந்து முடித்து தரப்படும் என உறுதியளித்ததையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

இந்தப் போராட்டத்தினால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக திருப்பூர் மங்கலம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...