மாணவியை ஆபாசமாக திட்டிய விவகாரம் : பாரதியார் பலகலை., பேராசிரியரை கைது செய்ய மனு

கோவை : பாரதியார் பல்கலைக்கழக மாணவியை ஆபாசமாக திட்டிய விவகாரத்தில் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

கோவை : பாரதியார் பல்கலைக்கழக மாணவியை ஆபாசமாக திட்டிய விவகாரத்தில் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஹரிதா. இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை உளவியல் துறையில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். ஹரிதா பல்கலைக்கழக பெண்கள் விடுதியில் தங்கி படிப்பை தொடர்ந்து வந்தார். இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 14-ம் தேதி விடுதியில் இருந்த சக மாணவிக்கு இரவு நேரத்தில் உடல்நிலை மோசமானது. இதனால், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று விடுதி காப்பாளர் பிரேமாவிடம் கேட்டுள்ளார். 

அதற்கு பிரேமா பிரேமா மறுத்ததோடு, விடுதியைப் பூட்டியதாகவும் கூறப்படுகிறது. இதை தொடர்ந்து, விடுதி தலைமை காப்பாளர் தர்மராஜ் மற்றும் உளவியல் துறை தலைவர் வேலாயுதம் ஆகியோர் ஹரிதாவை வகுப்பறையில் சக மாணவிகள் முன்னிலையில் அவமானப்படுத்தியதாகவும், மேஜை மீது நிற்க வைத்து தண்டித்தாகவும் தெரிகிறது. மேலும், துறை தலைவர் வேலாயுதம் ஹரிதாவை தகாத வார்த்தைகளில் பேசிய திட்டியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக,வேலாயுதம், பிரேமா மற்றும் தலைமை விடுதி காப்பாளர் தர்மராஜ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, தமிழக ஆளுநர், காவல்துறை தலைவர், மனித உரிமை ஆணையம், கேரள முதலமைச்சர் உள்ளிட்டோரிடம் ஹரிதா புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் மீது வடவள்ளி காவல் நிலையத்தில் விசாரணை நடைபெற்றது. 

இந்த நிலையில், மாணவி ஹரிதா புகார் தொடர்பாக உளவியல் துறை தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். 

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரபு கூறுகையில், "ஹரிதாவை ஆபாசமாக பேசிய உளவியல் துறை தலைவர் வேலாயுதம் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்யாமல் இழுத்தடித்து வருகின்றனர். முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை." என்றார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...