பொதுத்தேர்வு முடிவுகள் : கோவையில் 95.48 சதவீத தேர்ச்சி - முழு விபரங்கள்

கோவை : வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படியில் கோவை மாவட்டத்தில் 95.48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


கோவை : வெளியாகியுள்ள பிளஸ் 2 தேர்வு முடிவுகளின் அடிப்படியில் கோவை மாவட்டத்தில் 95.48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகம் முழுவதும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில் கோவை மாவட்டத்தில் 95.48 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதத்தில் கடந்தாண்டு 10-வது இடத்தில் இருந்த கோவை மாவட்டம் தற்போது 8-வது இடத்தை கோவை மாவட்டம் பிடித்துள்ளது. 

கோவையைப் பொறுத்தவரையில் மொத்தம் 347 பள்ளிகள் நடைபெற்ற தேர்வினை, 36,454 பேர் எழுதினர். அதில், 34,805 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 15,066 பேரும், மாணவிகள் 19,739 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதன்படி, மாணவர்கள் 93.62 சதவீதமும், மாணவிகள் 96.95 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

வித்தியாசம் 

கடந்த ஆண்டு 95.83 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு 95.48 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்தாண்டை காட்டிலும் 0.35 சதவீதம் குறைவு.

இது குறித்து கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் கூறுகையில், "மாற்றுத் திறனாளி மாணவர்கள் எழுதிய தேர்வில் 93.3 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பார்வையற்ற மாணவர்கள் 13 பேர் தேர்வு எழுதிய நிலையில் அனைவருமே தேர்சியடைந்தனர். இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்." என்றார். 

இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ. அய்யண்ணன் கூறுகையில், "கோவையில் 34 பேர் 1,180 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கியுள்ளனர். இதே போல், 1,151 முதல் 1,180 மதிப்பெண்கள் வரை 611 பேர் பெற்றுள்ளனர். 1,126 முதல் 1,150 மதிப்பெண் வரை 814 பேரும், 1,101 முதல் 1125 மதிப்பெண் வரை 1,018 பேரும், 1,001 முதல் 1,100 மதிப்பெண் வரை 5332 பேரும் பெற்றுள்ளனர். 7,500 பேர் ஆயிரத்திற்கு மேல் மதிப்பென் பெற்றுள்ளனர்." என்றார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...