கர்நாடகாவில் நீடிக்கும் அரியணை குழப்பம்: கொச்சினில் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களுக்கு விடுதி முன்பதிவு

கர்நாடகாவில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பதற்காக அவர்கள் கொச்சினில் உள்ள விடுதியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கர்நாடகாவில் யார் ஆட்சியைப் பிடிப்பது என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பதற்காக அவர்கள் கொச்சினில் உள்ள விடுதியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் எந்தக் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. பா.ஜனதா 104 தொகுதியிலும், காங்கிரஸ் 78 தொகுதியிலும், ஜனதா தளம்(எஸ்) 38 தொகுதியிலும் வெற்றி பெற்று இருக்கின்றன. பெரிய கட்சியாக வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க.,டிவ ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களின் கூட்டம் இன்று பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20-க்கும் மேற்பட்டோரும், ம.ஜ.த.வைச் சேர்ந்த ராஜவெங்கடப்பா நாயக்கா, வெங்கட ராவ் ஆகிய 2 எம்.எல்.ஏ.,க்களும் புறக்கணித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அனைத்து எம்.எல்.ஏ.க்களை விடுதியில் தங்க வைக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஒருபகுதியாக, ம.ஜ.த., எம்.எல்.ஏ.க்கள்., கொச்சியில் உள்ள விடுதியில் தங்க வைக்க அழைத்துச் செல்லப்படுகின்றனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் ஆந்திராவிற்கு அழைத்து செல்லப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள் ஜவடேகர், ஜேபி.நட்டா, தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதைத் தொடர்ந்து, ஆளுநர் வாஜுபாய் வாலாவை பா.ஜ.க., முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா சந்தித்து பேசினார். அப்போது, பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்தார். கர்நாடகாவில் நிலவி வரும் தற்போதைய சூழல், தமிழகத்தில் அரங்கேறிய கூவத்தூர் அரசியல் போலவே நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...