கோவை விமான நிலைய விரிவாக்கம்: இழப்பீடாக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

கோவை: விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

கோவை: விமான நிலைய விரிவாக்கத் திட்டத்திற்காக ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

கோவை விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கம் செய்வதற்காக 627 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நிலத்திற்கான விலை குறைவாக இருப்பதாக நில உரிமையாளர்கள் குற்றம்சாட்டி வந்தனர். இதுதொடர்பாக, பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை.

இந்நிலையில், கடந்த ஆண்டு இறுதியில், நில நிர்வாக ஆணையர் தலைமையில் இதற்காக தனிக்குழு தொடங்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் அடிப்படையில், நிலத்திற்கான மதிப்பு தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ.900, குடியிருப்பு நிலங்களுக்கு ரூ.1,500 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலைக்கு ஒப்புதல் அளித்த பயனாளிகள், மாவட்ட நிர்வாகத்திடம் கடிதம் அளித்து வருகின்றனர்.

இழப்பீடு

இதனிடையே விமான நிலையை விரிவாக்கப் பணிகளுக்காக கைய்யகப்படுத்தப்படும் நிலங்கள், வீடுகள், மரங்கள் உள்ளிட்டவற்றுக்கு இழப்பீடாக வழங்க ரூ.2 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. தற்போது வரை ரூ.1,300 கோடி மாநில அரசிடம் தயாராக இருப்பதாகவும், மேலும், ரூ.700 கோடி நிதி பெறப்படவுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர விரிவாக்கப் பணிகளுக்காக வெட்டப்பட்ட உள்ள தென்னை மரங்களுக்கு தலா ரூ.17 ஆயிரம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து கோவை மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது :- கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்காக நிலம் ஆர்ஜிதம் செய்யும் பணி பல ஆண்டுகளாக இழுபறியாக உள்ளது. தற்போது இதனை விரைந்து முடிக்கும் நோக்கில் பணி நடைபெற்று வருகிறது. ஆரம்ப காலங்களில் நிலத்திற்கு சதுர அடிக்கு ரூ. 200 முதல் ரூ. 500 வரை அரசு இழப்பீடு நிர்ணயித்தது. தற்போது பலகட்ட பேச்சு வார்த்தைக்கு பின் விவசாய நிலங்களுக்கு சதுர அடிக்கு ரூ. 900, குடியிருப்பு நிலங்களுக்கு ரூ.1,500 என்று விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, நில எடுப்பின் போது வீடுகளை இழந்தவர்களுக்கு இழப்பீட்டுடன் சேர்த்து வீடு கட்டிக் கொள்ள அரசூரில் 3 சென்ட் இடம் இலவசமாக வழங்கப்படும். மேலும், வீட்டு வசதி வாரியத்தின் மூலம் வீடுகள் கட்டித் தரவும் ஏற்பாடு செய்யப்படும்.

2 ஆயிரம் கோடி

இதற்காக அரசு ரூ.2 ஆயிரம் கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது. அரசு நிர்ணயித்த இழப்பீட்டுத் தொகைக்கு மொத்தம் உள்ள 24 பிளாக்குகளில் 15 பிளாக்குகளை சேர்ந்த நில உரிமையாளர்கள் சம்மதம் தெரிவித்து ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளனர். விரிவாக்கத்தின் போது அதிக அளவில் தென்னை மரங்கள் அழிக்கப்படும். எனவே தென்னைக்கான விலையை வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, ஒரு தென்னைக்கு ரூ.17 ஆயிரம் வரை விலை நிர்ணயம் செய்துள்ளனர். 24 பிளாக்குகளிலும் சேர்த்து சுமார் 3 ஆயிரம் தென்னை மரங்கள் பாதிப்பிற்குள்ளாகும். விவசாயிகள் தரப்பில் ஒரு தென்னைக்கு ரூ. 50 ஆயிரம் கேட்டுள்ளனர். ஆனால், இது முடியாத காரியம். தென்னை வைத்துள்ள நிலங்களுக்கு தனியாகவும் இழப்பீடு தரப்படுகிறது. எனவே ரூ.50 ஆயிரம் என்பது மிகவும் அதிகமான ஒன்றாகும். தற்போது அனைத்து பிளாக்குகளிலும் அளவீடு பணி நடைபெற்று வருகிறது. விரைவில் விமானநிலைய விரிவாக்கப் பணிகள் தொடங்கும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...