நீலகிரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 90.66 சதவிகிதம் பேர் தேர்ச்சி

நீலகிரி: பிளஸ்-2 பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 90.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

நீலகிரி: பிளஸ்-2 பொதுத்தேர்வில் நீலகிரி மாவட்டத்தில் 90.66 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தது. தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிட்டது. இதில், நீலகிரி மாவட்டத்தில் இந்தாண்டு 90.66 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டை விட இந்தாண்டு 1.40 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 7,802 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 7,073 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 2,893 மாணவர்களும், 4,180 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போல, மாணவர்களை விட மாணவிகளின் தேர்ச்சி விகிதமே அதிகமாக உள்ளது. மாணவிகள் 95.13 சதவீதமும், மாணவர்கள் 84.89 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் உள்ள 73 மேல்நிலைப் பள்ளிகளில் 32 அரசு பள்ளிகள் அடங்கும். அரசு பள்ளிகளில் மொத்தம் 3,062 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், 2,578 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அரசு பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் 84.19 ஆக உள்ளது.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...