பல நாட்களாக போலீசுக்கு டிமிக்கி கொடுக்கும் எஸ்.வி. சேகர்..! போஸ்டரால் பரபரப்பு

பா.ஜ.க., பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகரை தேடப்படும் நபராக அறிவித்து சென்னை நகரம் முழுவதும் ஓட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பா.ஜ.க., பிரமுகரும், நடிகருமான எஸ்.வி. சேகரை தேடப்படும் நபராக அறிவித்து சென்னை நகரம் முழுவதும் ஓட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

நடிகர் எஸ்.வி. சேகர் சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டர் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களை அவதூறாக விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் பத்திரிகையாளர் சங்கத்தினர் புகார் அளித்தனர். அவர் மீது பொது அமைதியை சீர்குலைத்தல், அவதூறு பரப்புதல், பெண் வன்கொடுமை உள்ளிட்ட 4 சட்டப்பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், கைது செய்வதற்கான எந்த நடவடிக்கையும் போலீசார் மேற்கொள்ளவில்லை.

கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக எஸ்.வி. சேகர் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், அதனை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இந்த வழக்கில் மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போல எஸ்.வி.சேகர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார். அதன் பிறகும் எஸ்.வி.சேகரை கைது செய்ய போலீசார் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

முன்ஜாமீன் கிடைக்காததால் அவர் தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. எஸ்.வி. சேகரை கைது செய்யாததற்கு அவரது உறவினர் ஒருவரின் தலையீடே காரணம் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்த நிலையில், எஸ்.வி.சேகர் போலீசாருக்கு சவால் விடும் வகையில் 2 நாட்களுக்கு முன்பு சென்னை பாண்டி பஜாரில் நடந்த விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டார். ஆனாலும், அவரை போலீசார் கைது செய்யவில்லை.

இந்த நிலையில், நடிகர் எஸ்.வி. சேகரை தேடப்படும் நபராக அறிவித்து சென்னை நகரம் முழுவதும் பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பல நாட்களாக போலீசுக்கு டிமிக்கி கொடுக்கும் எஸ்.வி. சேகர் என்ற வாசகங்கள் அடங்கிய இந்த போஸ்டரை மக்கள் மன்றத்தினர் ஒட்டியுள்ளனர். மயிலாப்பூர் பகுதியில் இந்த போஸ்டர்கள் அதிகமாக ஒட்டப்பட்டுள்ளன. அவருக்கு எதிரான வாசகங்களும் அதில் இடம் பெற்றுள்ளன.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...