இருபது கோடி ரூபாய் செலவில் விரிவாக்கப்படும் மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலை

கோவை : போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலை ரூ. 20 கோடி செலவில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

கோவை : போக்குவரத்து நெருக்கடி மிகுந்த மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலை ரூ. 20 கோடி செலவில் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 



கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து, சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டம் உதகைக்குச் செல்ல நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இதிலும் கோடை கால விடுமுறை சீசன் தொடங்கி விட்டால் இப்பாதையில் போக்குவரத்து இரு மடங்காக அதிகரித்து விடும். 

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் மலைப்பாதையின் அகலம் குறைவாக இருப்பதாலும், இச்சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகள் குறுகலாக இருப்பதாலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அந்த சாலையை சீர்ப்படுத்தும் விதமாக இச்சாலை பத்து மீட்டர் அகலத்திற்கு விரிவாக்கம் செய்ய தேசிய நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 

மேட்டுப்பாளையம் நகர எல்லையில் இருந்து மலையடிவாரமான கல்லார் வரையிலும், பின்னர் அங்கிருந்து குன்னூர் வரையிலுமான முப்பது கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்கம் மற்றும் தரைப்பாலங்களை அகலப்படுத்தும் பணிக்காக ரூபாய் இருபது கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இன்னும் நான்கு மாத காலத்திற்குள் இப்பணிகள் நிறைவடையும் என்றும், அடுத்த கோடை சீசனுக்கு இந்த மலைப்பாதையில் வாகன நெருக்கடியின்றி பயணம் மேற்கொள்ளலாம் என்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...