கோவையில் போலீஸ் மியூசியமாக மாறிய ஹாமில்டன் கிளப்

கோவை: ஹாமில்டன் போலீஸ் கிளப்பானது கோவை இரயில் நிலையம் எதிரே எஃப்.ஏ. ஹாமில்டன் என்ற ஆங்கிலேய காவல் துறை அதிகாரியால் கடந்த 1918-ம் ஆண்டு 3,488 சதுர அடியில் உருவாக்கப்பட்டது. கடந்த 1951-ம் ஆண்டு இந்த கிளப்பில் 16 அறைகள், நூலகம், சமையலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. நாளடைவில் முறையான கவனிப்பின்றி பாழடைந்தது ஹாமில்டன் கிளப்.

கோவை: ஹாமில்டன் போலீஸ் கிளப்பானது கோவை இரயில் நிலையம் எதிரே எஃப்.ஏ. ஹாமில்டன் என்ற ஆங்கிலேய காவல் துறை அதிகாரியால் கடந்த 1918-ம் ஆண்டு 3,488 சதுர அடியில் உருவாக்கப்பட்டது. கடந்த 1951-ம் ஆண்டு இந்த கிளப்பில் 16 அறைகள், நூலகம், சமையலறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. நாளடைவில் முறையான கவனிப்பின்றி பாழடைந்தது ஹாமில்டன் கிளப்.

அருங்காட்சியகம்

நீண்ட நெடுங்காலமாக பயன்பாடற்று கிடந்த இந்த கிளப்பை தமிழ்நாடு காவல் துறையினர் கடந்த 2016-ல் மறு சீரமைத்தனர்.

இந்த அருங்காட்சியகத்தில் காவல் துறையால் பயன்படுத்தப்பட்டு வந்த ஆயுதங்கள், சீருடைகள், மலையூர் மம்பட்டியான், வீரப்பன் ஆகியோர் பயன்படுத்திய துப்பாக்கிகள், விடுதலை புலிகள் பயன்படுத்திய நீர் மூழ்கிக் கப்பல்கள், இராணுவ வீரர்கள் பயன்படுத்திய உடைகள், வெடிகுண்டு கண்டுபிடிப்பு கருவிகள், உள்ளிட்ட பல அரிய மற்றும் சிறப்புக்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்று இருந்தது.



இன்றைய கால இளைஞர்கள் தமிழ்நாடு காவல் துறையை பற்றி தெரிந்து கொள்ள இந்த அருங்காட்சியகம் உதவுகிறது.



தற்போது புனரமைக்கப்பட்ட தமிழகத்தின் முதல் போலீஸ் மியூசியத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் டி.ஜி.பி., ராஜேந்திரன், கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஹரிஹரன், மேற்கு மண்டல ஐஜி.பாரி, கோவை சரக டி.ஐ.ஜி கார்த்திகேயன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரிகள் பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



முதலமைச்சர் வருகையை முன்னிட்டு ரயில் நிலையம் அருகே போலீசார் குவிக்கப்பட்டனர். அ.தி.மு.க., தொண்டர்களும் அங்கு திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Newsletter

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...