முதலமைச்சரின் கார் சென்ற தேசிய நெடுஞ்சாலையில் மரம் விழுந்ததால் பரபரப்பு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா தேசிய நெடுஞ்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் கடந்த 15 நிமிடங்களில் சாலையில் மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா தேசிய நெடுஞ்சாலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்ற கார் கடந்த 15 நிமிடங்களில் சாலையில் மரம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.



நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. நேற்று மட்டும் உதகையில் 44 மி.மீ மழை பதிவாகியுள்ள நிலையில் இன்று மதியம் உதகையில் மிதமான மழை பெய்தது.



இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள 122-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கோவையில் இருந்து கோத்தகிரி வழியாக காரின் மூலம் உதகைக்கு இன்று வந்தடைந்தார். இவரது கார், தொட்டபெட்டாவை கடந்த சுமார் 15 நிமிடங்களில் உதகை, கோத்தகிரி நெடுஞ்சாலையில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது.

இதனால், முதலமைச்சரின் கார் அதிர்ஷ்டவசமாக விபத்துக்குள்ளாகாமல் தப்பியது. மரம் விழுந்த விபத்தினால், சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகினர். தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், சாலையில் முறிந்து விழுந்த மரத்தை அகற்றிப் போக்குவரத்தை சீர் செய்தனர்.



Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...