கர்நாடக சட்ட சபையில் நாளை மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : கர்நாடக சட்ட சபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


டெல்லி : கர்நாடக சட்ட சபையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 104 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எடியூரப்பாவை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் வஜூபாய் வாலா நேற்று முன்தினம் இரவு அழைப்பு விடுத்தார். 

117 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவை கொண்டிருப்பதாக கூறி, ஆட்சி அமைக்க உரிமை கோரிய மத சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு அதிர்ச்சி கொடுத்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ‘ரிட்’ வழக்கு தொடுக்கப்பட்டது. அதில் எடியூரப்பா முதலமைச்சர் பதவி ஏற்க தடை விதிக்க கோரினர்.

இந்த வழக்கை அவசர வழக்காக உடனே விசாரிக்க நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி, எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூ‌ஷண் ஆகியோரைக் கொண்ட சிறப்பு அமர்வை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமைத்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், காங்கிரஸ், மஜத பெரும்பான்மை இருக்கிறது என்று கூறிய நிலையில் பாரதீய ஜனதாவை மட்டும் ஆட்சி அமைக்க அழைத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.



மேலும், கர்நாடக சட்ட பேரவையில் நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடலாமா? பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா? என்று நீதிபதி சிக்ரி கேள்வி எழுப்பினார்.

"நம்பிக்கை வாக்கெடுப்பில் எங்களுக்கே முதல் வாய்ப்பு வழங்க வேண்டும். நாளையே பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார். நம்பிக்கை வாக்கெடுப்பை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும். கால தாமதமின்றி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும். எம்.எல்.ஏ.,க்கள் அச்சமின்றி வாக்களிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என்று காங்கிரஸ், ம.ஜ.த., கட்சிகள் சார்பாக வாதிடப்பட்டது. அனைத்து எம்.எல்.ஏ.,க்களும் சட்டப்பேரவைக்கு வந்து வாக்களிக்க பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு, தகுந்த பாதுகாப்பு வழங்க கர்நாடக டி.ஜி.பி.,க்கு உத்தரவிட்டு உள்ளது. 

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...